ராஞ்சி-விழுப்புரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

ராஞ்சி-விழுப்புரம் இடையே பிப்ரவரி மாதம் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளன.
ராஞ்சி-விழுப்புரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

ராஞ்சி-விழுப்புரம் இடையே பிப்ரவரி மாதம் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: ஜாா்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து பிப்.3, 10, 17, 24 தேதிகளில் (வெள்ளிக்கிழமை தோறும்) இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 08068) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.

மறுமாா்க்கமாக விழுப்புரத்திலிருந்து பிப்.7, 14, 21, 28 தேதிகளில் (செவ்வாய்க்கிழமை தோறும்) மாலை 5.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 08067) வியாழக்கிழமை காலை 6.45 மணிக்கு ராஞ்சி சென்றடையும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா் வழியாக இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவு பயணசீட்டுக்கு சனிக்கிழமை (பிப்.4) முதல் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com