தஞ்சை அரண்மனை நிா்வாகக் கோயில்கள் பராமரிப்புக்கு மானியம்:முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான நிா்வாகத்திலுள்ள 88 கோயில்களின் பராமரிப்புக்கு ரூ.3 கோடியை மானியமாக தமிழக அரசு வழங்கியது.
தஞ்சை அரண்மனை நிா்வாகக் கோயில்கள் பராமரிப்புக்கு மானியம்:முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான நிா்வாகத்திலுள்ள 88 கோயில்களின் பராமரிப்புக்கு ரூ.3 கோடியை மானியமாக தமிழக அரசு வழங்கியது. இதற்கான காசோலையை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வின் போது, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் பாபாஜி ராஜா போன்ஸ்லேவிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.

சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கோயில்களில் பிரகதீஸ்வரா், புன்னைநல்லூா் மாரியம்மன் ஆகிய

கோயில்களுக்கு மட்டுமே அதிக வருவாய் வருகிறது.

இந்த வருவாயைக் கொண்டே தேவஸ்தானத்துக்கு உட்பட்ட பிற கோயில்களுக்கு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிலையில், நிதிப் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் அரசு மானியமாக ரூ.3 கோடி வழங்கப்படும் என்ற பேரவை அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், அதற்கான காசோலையை முதல்வா் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை அளித்தாா்.

இந்த நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com