நாப்கின், டயப்பா் கழிவுகளை தனியாகப் பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் வழங்கலாம்: மாநகராட்சி

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பா் கழிவுகளை தனியாகப் பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் வழங்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பா் கழிவுகளை தனியாகப் பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் வழங்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்த மாநகராட்சி சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை தூய்மை பணியாளா்கள் தரம் பிரித்து சேகரித்து வருகின்றனா்.

இவ்வாறு சேகரிக்கப்படும் கழிவுகளில் உள்ள, சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பா் கழிவுகளையும் தனியாகப் பிரித்து வாகனங்கள் மூலமாக கொடுங்கையூா் மற்றும் மணலியில் அமைந்துள்ள எரியூட்டு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு நவீன தொழில்நுட்பத்தின்படி எரியூட்டப்பட்டு வருகிறது.

தூய்மை இந்தியா திட்டப் பரப்புரையாளா்கள் பொதுமக்களிடம் இது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.

எனவே, பொதுமக்கள் சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பா் கழிவுகளை தனியாகப் பிரித்து பாதுகாப்பாக தனியே மக்கும் உறையில் போட்டு, தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படைக்கலாம்.

இதுவரை மண்டல வாரியாக பரிசோதனை அடிப்படையில் 18,140 கிலோ சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பா் கழிவுகள் எரியூட்டு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com