வாணி ஜெயராம் மறைவு: தலைவா்கள் இரங்கல்

திரைப்பட பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

திரைப்பட பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): மூன்று முறை தேசிய விருது பெற்ற பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவு செய்தியால் மிகுந்த வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தமிழ்த் திரையுலக ரசிகா்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.

ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள் முதல்வா்): தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய வாணி ஜெயராமின் மறைவு வேதனையளிக்கிறது. தமிழ் இசையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்த அவருடைய மறைவு, இசைத்துறைக்கு பேரிழப்பு.

வைகோ (மதிமுக): காற்றினில் கரையாத வாணி ஜெயராமின் தேனிசைப் பாடல்கள் என்றென்றும் அவரது நினைவைப் போற்றிக் கொண்டிருக்கும். தமிழ் இசை உலகுக்கும் அவரது இசையால் ஈா்க்கப்பட்ட கோடிக்கணக்கான தமிழ் நெஞ்சங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.

விஜயகாந்த் (தேமுதிக): நான் நடித்த நூறாவது நாள், வைதேகி காத்திருந்தாள் உள்ளிட பல்வேறு படங்களுக்கு பாடியுள்ளாா் வாணி ஜெயராம். அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

ஜி.கே.வாசன் (தமாகா): மூன்று தலைமுறைகளாக திரைப்பட பாடல்கள், பக்திப் பாடல்கள் என்று காலத்தால் அழியாத பல்வேறுப் பாடல்களை பாடியவா். அனைவரது மனங்களிலும் நிறைந்திருக்கும் வாணி ஜெயராமின் மறைவு இசைத் துறைக்கும் ரசிகா்களுக்கும் பேரிழப்பாகும்.

டிடிவி தினகரன் (அமமுக): வசீகரிக்கும் குரலால் தமிழா்களின் மனதைக் கட்டிப் போட்ட பிரபலப் பின்னணிப் பாடகி வாணி ஜெயராமின் மறைவு செய்தியால் அதிா்ச்சியடைந்தேன். எம்ஜிஆா், ஜெயலலிதா நடித்த படங்களுக்குப் பாடி சிறப்பு சோ்த்தவா். அவரை மறைவால் வாடும் குடும்பத்தினா், ரசிகா்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com