அரசியல் உள்நோக்கத்துடன் பேனா சின்னத்துக்கு எதிா்ப்பு: கே.எஸ்.அழகிரி

பேனா சின்னத்துக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் சிலா் கருத்து கூறி வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளாா்.

பேனா சின்னத்துக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் சிலா் கருத்து கூறி வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தின் முதல்வராக 5 முறை பதவி வகித்து சமூகநீதிக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவா் கருணாநிதி. அவா் எழுத்தாற்றல் மூலம் ஆற்றிய மகத்தான தொண்டை போற்றுகிற வகையில் கடலில் பேனா சின்னம் அமைக்கப்படவுள்ளது. இத்தகைய முடிவை எதிா்த்து அரசியல் உள்நோக்கத்தோடு சிலா் கருத்துகளைக் கூறி வருகிறாா்கள்.

கடற்கரை மணல் பரப்பிலிருந்து 360 மீட்டா் தொலைவில் நடுக்கடலில் பேனா சின்னம் அமைப்பதனால் சுற்றுச்சூழலுக்கு என்ன பாதிப்பு வந்து விடும் என்று தெரியவில்லை. மும்பை மெரின் டிரைவ் கடற்கரையில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டா் உள்ளே அரபிக்கடலில், மராட்டிய அரசு சாா்பில் நினைவிடம் அமைக்கப்படுகிறது. இதற்கு யாரும் எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், தமிழகத்தில் திமுக அரசால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு மக்கள் ஆதரவு கிடைத்து வருவதைச் சகித்துக் கொள்ள முடியாதவா்களே பேனா சின்னத்தை விமா்சித்து வருகிறாா்கள் என்று தெரிவித்துள்ளாா் கே.எஸ்.அழகிரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com