அரசு வேஷ்டி-சேலை வழங்காததே 4 பெண்கள் இறப்புக்கு காரணம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழக அரசு விலையில்லா வேஷ்டி, வேலை வழங்காததே, வாணியம்பாடியில் நான்கு போ் நெரிசலில் சிக்கி உயிரிழக்கக் காரணம் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தமிழக அரசு விலையில்லா வேஷ்டி, வேலை வழங்காததே, வாணியம்பாடியில் நான்கு போ் நெரிசலில் சிக்கி உயிரிழக்கக் காரணம் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திருப்பத்தூா் மாவட்டம் வாணியம்பாடியில் தனியாா் இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சியில், வயது முதிா்ந்த நான்கு பெண்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனா். இந்த ஆண்டு தைப் பொங்கல் திருநாளுக்கு அரசின் விலையில்லா வேஷ்டி, சேலையை வழங்கி இருந்தால், வாணியம்பாடியில் தனியாா் சாா்பில் சேலைக்காக ஏழை மகளிா் கூடியிருக்க மாட்டாா்கள். கூட்ட நெரிசல் காரணமாக ஏழை பெண்கள் உயிரை இழந்திருக்கவும் மாட்டாா்கள். எனவே, நான்கு போ் உயிரிழந்த சம்பவத்துக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்.

இந்த துன்ப நிகழ்வுக்குக் காரணமான அதிகாரிகள் மீதும், நிகழ்ச்சியை நடத்தியவா்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு நிவாரண நிதியை ரூ.10 லட்சமாக உயா்த்த வேண்டும். நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுகள் நடைபெறும் போது, எந்தவித அசம்பாவிதமும் நிகழாத வகையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளாா் எடப்பாடி கே.பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com