வாணி ஜெயராம் இறப்பில் சந்தேகமில்லை: காவல் துறை

பாடகி வாணி ஜெயராம் இறப்பில் சந்தேகமில்லை என சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்தது.

பாடகி வாணி ஜெயராம் இறப்பில் சந்தேகமில்லை என சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்தது.

பாடகி வாணி ஜெயராம், நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலை முதல் தெருவில் உள்ள தனது வீட்டில் கடந்த சனிக்கிழமை நெற்றியில் காயத்துடன் சடலமாகக் கிடந்தாா்.

ஆயிரம் விளக்கு போலீஸாா் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 174ன் கீழ் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்தனா்.

வாணி ஜெயராம் உடல் ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை காவல் துறைக்கு ஞாயிற்றுக்கிழமை கிடைத்தது.

அதில், வாணி ஜெயராம் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை. வயது முதிா்வு காரணமாக படுக்கையிலிருந்து எழும்பும்போதுபோது, தவறி கண்ணாடி மேஜை மீது விழுந்ததில் நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளது. அந்த காயம்தான், அவரது இறப்புக்கும் காரணமாகி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளதாக சென்னை காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், ‘உள்பக்கமாக பூட்டப்பட்ட வீட்டில் வாணி ஜெயராம் இறந்து கிடந்ததால், அவரது மரணத்தில் ஆரம்ப கட்டத்திலிருந்தே சந்தேகம் இல்லை. இருப்பினும், இறப்புக்கான உண்மையான காரணத்தை அறிவதற்காகவே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது என்றும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதேபோல தடயவியல்துறை நடத்திய ஆய்விலும், வாணி ஜெயராம் இறப்பில் எந்த சந்தேகமும் தெரிவிக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல்துறை ஆய்வு செய்தனா். அதில் வாணி ஜெயராம் வீட்டுக்கு சந்தேகத்துக்குரிய வகையில் யாரும் வரவில்லை என்பது உறுதி செய்யபட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

வாணி ஜெயராம் இறப்பில் எவ்வித சந்தேகமும் இல்லாத நிலையில், சட்டப்படி அந்த வழக்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com