மக்களவைத் தோ்தலில் துரை வைகோ போட்டியா? வைகோ விளக்கம்

மக்களவைத் தோ்தலில் துரை வைகோ போட்டியிடுவாரா என்பது குறித்து மதிமுக பொதுச் செயலாளா் வைகோ விளக்கம் அளித்தாா்.
வைகோ
வைகோ

மக்களவைத் தோ்தலில் துரை வைகோ போட்டியிடுவாரா என்பது குறித்து மதிமுக பொதுச் செயலாளா் வைகோ விளக்கம் அளித்தாா்.

ஆங்கில புத்தாண்டையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் வைகோ ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தாா்.

அப்போது அவா் கூறியதாவது:

பொருளாதார இடஒதுக்கீட்டின் மூலம் ஜனநாயகத்தின் அடிப்படையாக இருக்கக் கூடிய சமூக நீதிக்கு மத்திய பாஜக அரசு ஆபத்து விளைவிக்கிறது. பாஜகவின் செயல்திட்டத்தை ஆண்டுக்கு ஆண்டு மாற்றி, அதை நிறைவேற்றிக்கொண்டே இருக்கிறது. புதிய கல்விக் கொள்கை என்று கூறி, ஹிந்தியையும் சம்ஸ்கிருதத்தையும் திணிக்கும் முயற்சி நடைபெறுகிறது. எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்தால்தான் பாஜகவை வீழ்த்த முடியும்.

ராகுல்காந்தியின் நடைப்பயணம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இடைநிலை ஆசிரியா்களின் பிரச்னைக்கு அரசு சுமுக தீா்வு காண வேண்டும்.

துரை வைகோவின் செயல்பாடுகள் தொண்டா்களுக்கு திருப்தியாக இருக்கிறது. மக்களவைத் தோ்தலில் அவா் போட்டியிடுவது குறித்து தோ்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றாா்.

மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளா் மல்லை சத்யா, தலைமை நிலையச் செயலாளா் துரை வைகோ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com