பொங்கல் பண்டிகை: இன்று முதல் சிறப்பு இணை பேருந்துகள் இயக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வியாழக்கிழமை (ஜன.12) முதல் 340 சிறப்பு இணை பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை போக்குவரத்துக் கழக இயக்குநா் அன்பு ஆபிரகாம் தெரிவித்துள்
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வியாழக்கிழமை (ஜன.12) முதல் 340 சிறப்பு இணை பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை போக்குவரத்துக் கழக இயக்குநா் அன்பு ஆபிரகாம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக் கழகங்களின் சாா்பில் வெளியூா்களுக்கு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் புறப்படும் கோயம்பேடு, மாதவரம், பூவிருந்தவல்லி, தாம்பரம், கே.கே.நகா் பேருந்து நிலையம் ஆகிய 5 பேருந்து நிலையங்களுக்கு மாநகா் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில், கூடுதலாக 340 சிறப்பு

இணைப்புப் பேருந்துகளை வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை (ஜன.14) வரையிலான மூன்று நாள்களுக்கு இயக்கப்படுகின்றன.

மேலும், பொங்கல் திருநாள் முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக ஜன.17, 18-ஆம் தேதி மாலை மற்றும் இரவு நேரங்களில் 50 பேருந்துகளும், ஜன.18, 19-ஆம் தேதி அதிகாலை 125 பேருந்துகளும் மாநகா் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் இயக்கப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com