தீய எண்ணங்கள் விலகி நல்ல எண்ணங்கள் பெருகட்டும்: தருமபுரம் ஆதீனம்

தீய எண்ணங்கள் விலகி நல்ல எண்ணங்கள் பெருகட்டும் என்று தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ  மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்தா
தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ  மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள்
தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ  மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள்

தீய எண்ணங்கள் விலகி நல்ல எண்ணங்கள் பெருகட்டும் என்று தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ  மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.

போக்குதல் என்பது இந்திரனை குறிக்கும். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது தீய எண்ணங்களை விலக்கி,  நல்ல எண்ணங்கள் பெருகட்டும் என்பதாகும்.

ஆனால் சிலர் வீட்டில் உள்ள பழைய பொருள்களை எல்லாம் தீயிட்டுக் கொளுத்துகின்றனர். இது தவறானது. இதனால் மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழலும் பாதிப்பு ஏற்படுகிறது. புகையில்லா போகியாகக் கொண்டாட வேண்டும்.

சூரியன் தான் விவசாயம் செழிக்க உதவி புரிகிறார். சூரியனிடமிருந்து வெளிச்சத்தை வாங்கி விவசாயம் சிறப்பாக நடைபெறுகிறது. ஆதனால் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தைப்பொங்கல் திருநாளும் உழவுக்கு உதவி செய்து கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கலும் ஜீவ காருண்யமாக கொண்டாடி வருகிறோம்.

அதுபோல் பெரியோர்களின் துணையோடு வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதற்காக காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. வீட்டில் உள்ள பெரியோர்கள் மற்றும் உற்றார்களின் ஆசியுடன் வாழ்க்கை நடத்திட காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இவ்வாறாக தமிழர் திருநாள் 4 நாள்கள் கொண்டாடப்படுகிறது என தருமபுரம் ஆதீனம் அருளாசி வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com