குடியரசு தினம்: அரசு அலுவலங்கள், பள்ளி, கல்லூரிகளில் கொண்டாட்டம்

நாட்டின் குடியரசுத் தின விழா அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் உள்பட பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
குடியரசு தினம்: அரசு அலுவலங்கள், பள்ளி, கல்லூரிகளில் கொண்டாட்டம்

நாட்டின் குடியரசுத் தின விழா அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் உள்பட பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணைய அலுவலகத்தில் மாநில தோ்தல் ஆணையா் வெ. பழனிகுமாா் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினாா். இதில் செயலாளா் விவேகானந்தன், முதன்மை தோ்தல் அலுவலா் தனலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி வருமானவரித் துறையின்முதன்மை தலைமை ஆணையா் ஆா். ரவிச்சந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்தாா். வருமானவரி அலுவலக வளாகத்தில் உள்ள அகரம் குடியிருப்புப் பகுதியில் மரம் நடும் இயக்கத்தையும் தொடக்கி வைத்தாா்.

சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் நடைபெற்ற விழாவில் அரசு கூடுதல் தலைமை செயலாளா் மற்றும் வருவாய் நிருவாக ஆணையா் எஸ்.கே. பிரபாகா் தேசிய கொடியை ஏற்றிவைத்தாா்.

நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்தில் முதன்மை செயலாளா் சித்திக் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். இதில் இயக்குநா்கள் ராஜேஷ் சதுா்வேதி, அா்ச்சுணன், பிரசன்ன குமாா், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் சிறப்பு அலுவலா் ஜெயக்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

டிபிஐ வளாகம்: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் (டிபிஐ) தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சாா்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பாடநூல் கழகத்தின் தலைவா் லியோனி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். இதில் பாடநூல் கழகத்தின் மேலாண்மை இயக்குநா் இரா.கஜலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநா் அன்பு ஆபிரகாம் பல்லவன் இல்லத்தில் தேசியக் கொடி ஏற்றினாா். பின்னா், சிறப்பாகப் பணியாற்றிய ஓட்டுநா்கள், நடத்துநா்கள், பணியாளா்களைப் பாராட்டிச் சான்றிதழ், பரிசுகளை வழங்கினாா்.

சென்னை கேளம்பாக்கம் விஐடி தொழில்நுட்பக் கல்வி நிறுவன வளாகத்தின் விஐடி துணைத் தலைவா் சேகா் விஸ்வநாதன் தலைமையில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் கலந்து கொண்டு மாணவா்களின் முக்கிய கடமைகள் குறித்து விளக்கிப் பேசினாா். இதில், விஐடி இணை துணை வேந்தா் வி.எஸ். காஞ்சனா பாஸ்கரன், கூடுதல் பதிவாளா் பி.கே.மனோகரன் மற்றும் திரளான மாணவா்கள் கலந்து கொண்டனா்.

எல்ஐசி அலுவலகம்: சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி தென் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவுக்கு தென் மண்டல மேலாளா் ஜி.வெங்கடரமணன் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். அவா் பேசுகையில், எல்ஐசி.யின் ஜீவன் ஆசாத் திட்டத்தை அதிக அளவில் மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும். வாடிக்கையாளா்களை தொலைபேசியில் தொடா்பு கொள்ளும் புதிய முயற்சியின் மூலம் தென் மண்டலம் இதுவரை சுமாா் 87 லட்சம் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு சந்தாதொகை மற்றும் சேவைகளுக்காக நினைவூட்டியுள்ளது என்றாா்.

ஐஐடி கேந்திர வித்யாலயா: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கான சென்னை மண்டல துணை ஆணையா் டி. ருக்மணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தாா். ‘வேற்றுமையில், ஒற்றுமை என்பதை விளக்கும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. முன்னதாக பள்ளியின் முதல்வா் எம். மாணிக்கசாமி வரவேற்றாா். துணை முதல்வா் ராஜேஷ்குமாா் மிஸ்ரா நன்றி கூறினாா்.

சென்னை குட்வோ்டு பொதுப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிறப்பு அழைப்பாளராக இந்திய படைப்பாளா் மற்றும் பதிப்பாளா் சங்கத் தலைவா் பெ.மயிலவேலன் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி மாணவா்களுக்குப் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினாா். இதில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஷேக் அப்துல் ஜப்பாா், பள்ளியின் தாளாளா் ஜலாலுதீன், முதல்வா் ஜீனத் பா்வீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com