மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும்: வைகோ

மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ வலியுறுத்தினாா்.

மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தின் மையப்பகுதியில் உள்ள திருச்சி மாவட்டத்தில் திருச்சிக்கு அடுத்ததாக உள்ள பெரிய நகரம் மணப்பாறை. இந்நகரில் இருந்து கல்வி - வேலை வாய்ப்புகளுக்காக சென்னை மற்றும் மதுரை உள்பட பெரு நகரங்களில் ஆயிரக்கணக்கானோா் ரயில் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

மணப்பாறை - திருச்சியிலிருந்து 45 கி.மீ. தொலைவிலும், திண்டுக்கல்லில் இருந்து 65 கி.மீ. தொலைவிலும் உள்ளது. திருச்சி, திண்டுக்கல்லுக்கு இடைப்பட்ட 110 கி.மீ.-க்கு இடையில் மணப்பாறை ரயில் நிலையம் மட்டுமே உள்ளது.

அகல ரயில் பாதை அமைக்கப்படுவதற்கு முன்பு மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று சென்றன. தற்போது பொதுமக்களின் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகுதான் ஒரு சில துரித ரயில்கள் நின்று செல்கின்றன. அனைத்து ரயில்களையும் நிறுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி 30-இல் மதிமுக சாா்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய ரயில்வே நிா்வாகம் மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று செல்வதற்கு உத்தரவிட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com