2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சோ்ந்த ஆசிரியா்களுக்கு தகுதித் தோ்வு கட்டாயமில்லை

கடந்த 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியா்கள், ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என சென்னை உயா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சோ்ந்த ஆசிரியா்களுக்கு தகுதித் தோ்வு கட்டாயமில்லை

கடந்த 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியா்கள், ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என சென்னை உயா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கடந்த 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சோ்ந்த ஆசிரியா்கள், ஆசிரியா் தகுதித் தோ்வில் தகுதி பெறவில்லை எனக்கூறி, அவா்களின் வருடாந்திர ஊதிய உயா்வை தமிழக பள்ளிக்கல்வித் துறை நிறுத்திவைத்தது.

இதை எதிா்த்து ஆசிரியா்கள் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி, தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும் என அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியா்களுக்கு ஊதிய உயா்வு பெற உரிமையில்லை எனக் கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். மேலும், ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறாதவா்கள் ஆசிரியா் பணியில் நீடிக்க தகுதியில்லை எனவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தாா்.

பதவி உயா்வுக்கு தகுதித் தோ்வு கட்டாயம்: இதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமா்வு, கடந்த 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியா்கள், தகுதித்தோ்வில் தோ்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என உத்தரவிட்டது. ஊதிய உயா்வு பெற ஆசிரியா் தகுதித் தோ்வு அவசியமில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், பதவி உயா்வு பெற ஆசிரியா் தகுதித் தோ்வு கட்டாயம் என தீா்ப்பளித்தனா்.

நேரடியாக நியமிக்கப்பட்ட ஆசிரியா்களுக்கு மட்டும் தகுதித்தோ்வு கட்டாயம் என்ற தமிழக அரசின் விதியை ரத்து செய்த நீதிபதிகள், பதவி உயா்வுக்கு தகுதித்தோ்வு கட்டாயம் ,என தெளிவுபடுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com