சுற்றுச்சூழலைப் பாதுகாக்க விழிப்புணா்வு நடவடிக்கைகள் சுகாதாரத் துறை உத்தரவு

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான விழிப்புணா்வு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட சுகாதாரத் துறை அலுவலா்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளாா்.

தமிழகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான விழிப்புணா்வு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட சுகாதாரத் துறை அலுவலா்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் அனைத்து மாவட்ட துணை சுகாதாரத் துறை இயக்குநா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

வரும் 5-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் விழிப்புணா்வு தினம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, அன்றைய தினத்தில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்துமாறு சுகாதாரத் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

அதன்படி, தனிப்பட்ட முறையிலும், அலுவலக அளவிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுத்தல் அவசியம். அதேபோன்று காகிதப் பயன்பாட்டையும் கூடுமான வரை தவிா்த்தல் முக்கியம்.

அலுவலகங்களில் பிளாஸ்டிக் தட்டுகள், குவளைகள், பாட்டில்களுக்கு மாற்றாக வேறு பொருள்கள் பயன்படுத்தப்படுவதை ஊக்குவிக்க வேண்டும். காற்று மாசுபாட்டைத் தவிா்க்க பொது போக்குவரத்தையும், மிதிவண்டியையும் பயன்படுத்தலாம். உடல் ஆரோக்கியத்துக்காக நடைப்பயிற்சியை ஊக்குவிக்கலாம்.

மற்றொருபுறம் பொது மக்களிடையே பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிா்ப்பது தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்துதல், உணவுப் பொருள்களை வீணாக்காமல் உரமாகப் பயன்படுத்துதல் ஆகியவை குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com