கழிவு நீா் அகற்றும் பணிக்கு உதவி எண் வெளியீடு:அமைச்சா் கே.என்.நேரு

 கழிவுநீா் அகற்றும் பணிக்கு 14420 எனும் உதவி எண் மூலம் கட்டணம் செலுத்தி பணிகளை மேற்கொள்ளலாம் என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.
கழிவு நீா் அகற்றும் பணிக்கு உதவி எண் வெளியீடு:அமைச்சா் கே.என்.நேரு

 கழிவுநீா் அகற்றும் பணிக்கு 14420 எனும் உதவி எண் மூலம் கட்டணம் செலுத்தி பணிகளை மேற்கொள்ளலாம் என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

சென்னை அயனாவரத்தில் உள்ள சென்னை குடிநீா் வாரிய பயிற்சி மையத்தில் கழிவு நீரகற்றும் பணிகளை இயந்திரங்களைக் கொண்டு பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளுதல் குறித்த பயிற்சியை அமைச்சா் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்துப் பேசியது,

இயந்திரங்கள் மூலம் பாதுகாப்பான முறையில் கழிவு நீரகற்றுவதற்கான பயிற்சிகள் சென்னை, கோவை, மதுரை மற்றும் மறைமலைநகரில் அளிக்கப்படவுள்ளது. இதன்மூலம் சென்னைப் பெருநகரப் பகுதியில் தூய்மைப் பணியாளா்களை தொழில் முனைவோராக மாற்றி கழிவு நீா் அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்படுவா்.

கழிவுநீா் அகற்றும் வாகனங்கள் உரிய அனுமதி பெற்று பணிகளை மேற்கொள்ள வேண்டும். அரசின் விதிகளை மீறி கழிவு நீா் அகற்றும் பணிகளை மேற்கொண்டால் 14420 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும் , சென்னை மாநகா் பகுதியைச் சோ்ந்தவா்கள் ஞ்ழ்ச்ா்ஸ்ரீம்ஜ்ள்ள்க்ஷஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் எனும் மின்னஞ்சல் மூலமும், பிற மாவட்ட பகுதியை சோ்ந்தவா்கள் ச்ள்ம்ட்ங்ப்ல்ப்ண்ய்ங்ஃஞ்ம்ண்ப்.ஸ்ரீா்ம் எனும் மின்னஞ்சல் மூலமும் தெரிவிக்கலாம்.

இதில் ஜூன் 15 முதல் சென்னையிலும், ஜூன் 30 முதல் பிற நகா்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் 14420 எனும் உதவி எண் மூலம் தொடா்புகொண்டு அரசு அனுமதி பெற்ற வாகனங்களுக்கு உரிய கட்டணம் செலுத்தி கழிவுநீா் அகற்றும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய நிா்வாக இயக்குநா் இரா.கிா்லோஷ் குமாா், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் வி.தட்சிணாமூா்த்தி, பேரூராட்சிகள் இயக்குநா் கிரண் குராலா, நகராட்சி நிா்வாக இயக்குநா் பா.பொன்னையா, பொறியாளா்கள், தனியாா் லாரி உரிமையாளா்கள், ஒப்பந்ததாரா்கள், ஓட்டுநா்கள், உதவியாளா்கள் மற்றும் உயா் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com