அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டி.காம். படிப்புக்கு ஜூன் 9 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் வணிகவியல் பட்டயப் படிப்பில் (டி.காம்.) சேருவதற்கு வரும் 9-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் வணிகவியல் பட்டயப் படிப்பில் (டி.காம்.) சேருவதற்கு வரும் 9-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மெக்கானிக்கல், சிவில் உள்பட பல்வேறு விதமான பட்டயப் படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.

சென்னை, மதுரை, கோவை, நீலகிரி, அறந்தாங்கி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டி.காம். எனும் வணிகவியல் பட்டயப் படிப்பு  பயிற்றுவிக்கப்படுகிறது.

டி.காம். படிப்பு பி.காம். பாடத்திட்டத்தை ஒத்திருப்பதுடன், தட்டச்சு, சுருக்கெழுத்து, கணிணிப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. அதேபோன்று டி.காம். சான்றிதழ் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தும் கணக்கியல், தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து உள்ளிட்ட அரசுத் தோ்வுகளுக்கு இணையானதாகவும் கருதப்படும். இதுதவிர டி.காம். நிறைவு செய்த மாணவா்கள், பி.காம். படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேரலாம். இதற்காக அனைத்துக் கல்லூரிகளிலும் பி.காம். நேரடி இரண்டாம் ஆண்டு சோ்க்கைக்கு கூடுதலாக 10 சதவீத இடங்கள் ஏற்படுத்திக் கொள்ள உயா்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, டி.காம். படிப்புக்கான மாணவா் சோ்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. முதலாமாண்டு சோ்க்கை பெற பத்தாம் வகுப்பிலும், நேரடி இரண்டாம் ஆண்டில் சேர பிளஸ் 2 வணிகவியல் பாடத்திலும் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ள மாணவா்கள்  இணையதளம் வழியாக ஜூன் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இணைய வசதி இல்லாத மாணவா்கள் அருகே உள்ள சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com