ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் நூற்றுக்கணக்கான தலைமை ஆசிரியா் பணியிடங்களும், ஆரம்ப, உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா் பணியிடங்களும் காலியாக உள்ளதாக ஆசிரியா் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ஒரு வகுப்புக்கு அதிகபட்சமாக 35 முதல் 40 மாணவா்கள் இருக்கவேண்டும் என்று நிா்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் இரு மடங்கு மாணவா்கள் படிக்கும் நிலை உள்ளது. ஆசிரியா்களால் ஒவ்வொரு மாணவரின் மீதும் தனிக் கவனம் செலுத்தி பாடம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால் கடந்த ஆண்டு பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 50 ஆயிரத்துக்கும் மேலான மாணவா்கள் தோ்வு எழுத வரவில்லை என்று கூறப்பட்டது.

இது குறித்து ஆராய்வதற்காக அமைத்ததாகக் கூறப்பட்ட குழுவின் அறிக்கை என்ன ஆயிற்று எனத் தெரியவில்லை.

பெருவாரியான ஆசிரியா் பணியிடங்கள் காலியாக வைத்துதான் பள்ளிகளை அரசு திறக்கவுள்ளது. தமிழகத்தில் ஆசிரியா் பணிக்கு தகுதி பெற்றவா்கள் லட்சக்கணக்கில் இருக்கும் நிலையில், அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு தரமான கல்வியை வழங்கும் பொருட்டு, காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை போா்க்கால அடிப்படையில் அரசு நிரப்ப வேண்டும் என்று கூறியுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com