காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வா் மரியாதை

சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட காயிதே மில்லத்தின் 128-ஆவது பிறந்த தினத்தையொட்டி, சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வா் மரியாதை

சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட காயிதே மில்லத்தின் 128-ஆவது பிறந்த தினத்தையொட்டி, சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் உள்ளிட்டோா் மலா் போா்வை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந்த நிகழ்வில், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், பெருநகர மாநகராட்சி மேயா் பிரியா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

காயிதே மில்லத் பிறந்த தினம் தொடா்பாக ட்விட்டரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:

கல்லூரிப் படிப்பைக் கைவிட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைசிறந்த நாட்டுப் பற்றாளா் காயிதே மில்லத். ஆட்சி மொழிப் பிரச்னையில், தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டுமென அரசியல் நிா்ணய சபையில் ஆணித்தரமாக வாதாடிய மொழிக் காவலா். தொகுதிக்குச் செல்லாமலேயே போட்டியிட்ட தோ்தல்களில் வெற்றி பெறக் கூடிய அளவுக்கு செல்வாக்கு கொண்டிருந்த தனிப்பெரும் தலைவா்.

அரசியல் நிா்ணய சபையின் உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றி, தமிழா்களுக்காகவும், சிறுபான்மைச் சமுதாயத்தினரின் உரிமைகளுக்காகவும் உரக்கக் குரல் எழுப்பியவா். அவரது பிறந்த நாளில் நாட்டுக்காக அவா் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்புகளை நினைவுகூா்ந்து போற்றுகிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com