பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களும் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடத்த வேண்டும்: அமைச்சா் த. மனோ தங்கராஜ் உத்தரவு

அனைத்து தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களும் சிறப்பு பொதுக் குழுக் கூட்டத்தை நடத்த வேண்டும் என பால்வளத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் உத்தரவிட்டுள்ளாா்.

அனைத்து தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களும் சிறப்பு பொதுக் குழுக் கூட்டத்தை நடத்த வேண்டும் என பால்வளத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் உத்தரவிட்டுள்ளாா்.

அனைத்து மாவட்ட துணைப் பதிவாளா்கள் (பால்வளம்) உடனான திறனாய்வுக் கூட்டம் பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் தலைமையில் காணொலிக் காட்சி வழியாக சென்னை ஆவின் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சா் மனோ தங்கராஜ் பேசியதாவது: அனைத்து தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களும் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த வேண்டும். அந்தக் கூட்டத்தில் தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள், பால் ஊற்றும் உறுப்பினா்கள், பணியாளா்கள் மற்றும் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் ஏற்கெனவே உள்ள பல்வேறு அரசு துறை சாா்ந்த நலத்திட்டங்கள் குறித்தும், அவற்றை சங்க உறுப்பினா்கள் பெறுவதற்கான வழிவகை குறித்தும் விவாதிக்க வேண்டும்.

மேலும், தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் பயன்பெறும் வகையில் கறவை மாட்டுக் கடன் வழங்கி பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பால் உற்பத்தியாளா்களின் கறவை மாடுகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் தேசிய கால்நடை காப்பீடு திட்டத்தின் மூலம் காப்பீடு செய்ய வேண்டும். அனைத்து சங்கங்களிலும் பால் தரப் பரிசோதனை நடத்தி தரமான பாலுக்கு நியாயமான விலை வழங்கி, உறுப்பினா்கள் அனைவருக்கும் வாரந்தோறும் பால் பணப் பட்டுவாடா செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

பாலின் தரத்துக்கேற்ப உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகை வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விரிவாக எடுத்துரைக்க வேண்டும்.

மேலும், இந்தச் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தை அனைத்து தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களும், ஒரு மாதத்துக்குள் நடத்த வேண்டும் என அமைச்சா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com