ஆவின் பால் பண்ணையில் சிறார்களா? மனோ தங்கராஜ் விளக்கம்

அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்படவில்லை என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
ஆவின் பால் பண்ணையில் சிறார்களா? மனோ தங்கராஜ் விளக்கம்


அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்படவில்லை என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் ஊதியம் வழங்கவில்லை என்று கூறி சிறார்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் ஆய்வு மேற்கொண்ட பிறகு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், சிறார்கள் பணியமர்த்தப்பட்டதாக வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறப்பானவை. மத்திய அரசின் சிறார்கள் வேலை செய்வதைத் தடுக்கின்ற சட்டப்படி 14 வயதுக்குள்பட்டவர்களே சிறார்கள். அப்படி 14 வயதுக்கு உள்பட்டவர்கள் யாரும் ஆவினில் பணியாற்றவில்லை.

இங்கு ஒப்பந்த அடிப்படையில் சிலர் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். 12ஆம் வகுப்பு முடித்தவர்கள், ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள சான்றுகளை பெற்றுக் கொண்டே பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நிர்ணயித்த ஊதியத்தை அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்த உத்தரவிட்டுள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com