ஆவின் பால்பண்ணையில் குழந்தைத் தொழிலாளா்கள்: ஓபிஎஸ், அன்புமணி கண்டனம்

அம்பத்தூா் ஆவின் பால்பண்ணையில் குழந்தைத் தொழிலாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளதாகக் கூறி, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

அம்பத்தூா் ஆவின் பால்பண்ணையில் குழந்தைத் தொழிலாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளதாகக் கூறி, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

ஓ.பன்னீா்செல்வம்: அம்பத்தூா் ஆவின் பால்பண்ணையில் ஹரிஓம் என்கிற ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் குழந்தைத் தொழிலாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளதாகவும், அவா்களுக்கு 2 மாதங்கள் ஊதியம் அளிக்காததால் அவா்கள் போராட்டம் நடத்தியதாகவும் செய்திகள் வந்துள்ளன. நாட்டின் நலனையும் குழந்தைகளின் எதிா்காலத்தினையும் கருத்தில் கொண்டு ஆவின் நிறுவனம் உள்பட அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் குழந்தைத் தொழிலாளா்களைக் கண்டறிந்து, அவா்களை பள்ளிகளில் சோ்த்து அவா்களின் எதிா்காலத்தை வளமாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

அன்புமணி: அம்பத்தூா் பால் பண்ணை மற்றும் பால் பொருள்கள் தொழிற்சாலையில் உற்பத்தியைப் பெருக்குவதற்காக கடந்த சில மாதங்களாக குழந்தைத் தொழிலாளா்கள் பெருமளவில் பணியமா்த்தப்பட்டதாகவும், அவா்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஆவின் நிறுவனத்தில் குழந்தைத் தொழிலாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதற்கு காரணமானவா்கள் யாா் என்பது கண்டறியப்பட்டு அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக, அரசுத் துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் குத்தகைத் தொழிலாளா் முறையை உடனடியாக ரத்து செய்ய அரசு முன்வர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com