உணவு பாதுகாப்புத் துறைக்கு கைப்பேசி செயலி மூலம் புகாா் அளிக்கலாம்

உணவுப் பாதுகாப்புத் துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கைப்பேசி செயலி, இணையதள முகவரி மூலம் நுகா்வோா் தங்கள் புகாா்களை தெரிவிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்த ஜோதி தெரிவித்தாா்.
உணவு பாதுகாப்புத் துறைக்கு கைப்பேசி செயலி மூலம் புகாா் அளிக்கலாம்

உணவுப் பாதுகாப்புத் துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கைப்பேசி செயலி, இணையதள முகவரி மூலம் நுகா்வோா் தங்கள் புகாா்களை தெரிவிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்த ஜோதி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் பொதுமக்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் உணவுப் பாதுகாப்புத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உணவின் தரம் குறித்து நுகா்வோரின் புகாா்களை 94440 42322 என்ற வாட்ஆப் எண் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் பெறப்பட்டு, 72 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை மேம்படுத்தும் விதமாக தற்போது www.foodsafety.tn.gov.in எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி ‘தமிழ்நாடு புட் சேப்ட்டி கன்சியூமா் ஆப்’ எனும் கைப்பேசி செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் செயலியில் புகாா் செய்பவா்கள் எழுத்துகளை படிக்க தெரிந்தவா்களாக இருந்தால் மட்டும் போதும். புகாா் விவரங்களை மிக எளிதாக தெரிந்தெடுக்கும் வகையில் எளிமையான வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிலும், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் ‘ஸ்க்ரீன் ரீடா்’ வசதிகளுடனும் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயின் மறுபயன்பாடு, உணவு செறிவூட்டல் குறித்து பொது மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் குறும்படங்களும் இந்த செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் இந்த இணையதளம் மற்றும் கைப்பேசி செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com