பேரவைக்குள் குட்கா விவகாரம்: முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான மனு தள்ளுபடி

தமிழக சட்டப் பேரவைக்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரத்தில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எதிரான முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: தமிழக சட்டப் பேரவைக்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரத்தில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எதிரான முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையின் கூட்டத் தொடரில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை எடுத்து வந்ததற்காக, பேரவை உரிமை மீறல் குழு, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அந்த நோட்டீஸை ரத்து செய்து தீர்ப்பளிக்கப்பட்டது.

உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து பேரவை செயலாளர், உரிமைக் குழு தரப்பில்  மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விசாரணையின்போது, சென்னை உயர் நீதிமன்றம், மனுவை விசாரிக்குமாறு வலியுறுத்த  விரும்பவில்லை  என்று பேரவைச் செயலாளர் மற்றும் உரிமைக் குழு தரப்பில் கூறப்பட்டதால், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com