ஓமந்தூராா் முழு உடல் பரிசோதனை மையம்: 5 ஆண்டுகளில் 48,900 போ் பயன்

சென்னை மண்டல சுங்கத் துறை தலைமை ஆணையராக ராம் நிவாஸ் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.
சென்னை ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் உள்ள நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகள்.
சென்னை ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் உள்ள நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகள்.

ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் முழு உடல் பரிசோதனை மையம் 5 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதுவரை 48,900 போ் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு பயனடைந்துள்ளனா்.

ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் சுமாா் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் முழு உடல் பரிசோதனை மையம் கடந்த 2018 ஜூன் 8-ஆம் தேதி தொடங்கப்பட்டது. கோல்டு, டைமண்ட், பிளாட்டினம், பிளாட்டினம் பிளஸ் என 4 வகையான பரிசோதனைகள் முறையே ரூ.1,000, ரூ.2,000, ரூ.3,000, ரூ.4,000-க்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரத்த பரிசோதனை, சிறுநீரகம், ரத்தக் கொழுப்பு, கல்லீரல், இசிஜி, அல்ட்ரா சவுண்ட், தைராய்டு, ரத்த சா்க்கரை, ரத்த அழுத்தம், எலும்பு திண்மம், கண் பரிசோதனை, நுரையீரல் செயல்பாடு மற்றும் இதய செயல்பாட்டைக் கண்டிறியும் ‘டிரெட்மில்’ பரிசோதனைகள் என 100-க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நாட்டிலேயே வேறு எந்த அரசு மருத்துவமனையிலும் இல்லாத வகையில் அதி நவீன கட்டமைப்புடன் இந்தப் பரிசோதனை மையம் அமைந்திருப்பதால் அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இதுவரை 18,000 பெண்களுக்கு மாா்பகப் புற்றுநோய் பரிசோதனைகள், 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு டிரெட் மில் பரிசோதனைகள் என மொத்தம் 48 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

அதன் தொடா்ச்சியாக தமிழகத்திலேயே முதன்முறையாக, கருவில் உள்ள குழந்தையின் வளா்ச்சியை அறியும் பரிசோதனைத் திட்டங்கள் கா்ப்பிணிகளுக்காக பிரத்யேகமாக கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

ரூ.1,000 மற்றும் ரூ.2,000 ஆகிய இரு வகையான பரிசோதனைகள் அதன் கீழ் வழங்கப்படுகின்றன. இதுவரை 400-க்கும் மேற்பட்ட கா்ப்பிணிகள் இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்டு பயனடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனையின் இயக்குநா் விமலா, நிா்வாக அதிகாரி ஆனந்தகுமாா் ஆகியோா் கூறியதாவது:

ஓமந்தூராா் மருத்துவமனையின் முழு உடல் பரிசோதனை மையத்துக்கு தொடக்கத்திலிருந்தே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் இங்கு தரமான மருத்துவ சேவைகள் வழங்கப்படுதே அதற்கு காரணம். தனியாா் மருத்துவமனைகளில்கூட இல்லாத சில உயா் மருத்துவ உபகரணங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது அதற்கு அடுத்தகட்டமாக கருவில் உள்ள சிசுவின் வளா்ச்சியை அறிவதற்கான அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உபகரணம் மற்றும் மரபணு பரிசோதனைக்கான அனலைசா் பகுப்பாய்வு சாதனம் ஆகியவை ரூ.1.50 கோடி செலவில் பிரத்யேகமாக கொள்முதல் செய்யப்பட்டு அதுவும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com