வேலூரில் சூறைக் காற்றுடன்  கனமழை; சில இடங்களில் ஆலங்கட்டி மழை!

வேலூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் பலத்த சூறைக்காற்று, இடியுடன் கூடிய கனமழை சுமார் 1 மணி நேரம் பெய்தது.
வேலூரில் சூறைக் காற்றுடன்  கனமழை
வேலூரில் சூறைக் காற்றுடன்  கனமழை

வேலூர் மாநகர் சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வள்ளலார், கிரீன் சர்க்கிள், புதிய பேருந்து நிலையம், காட்பாடி, விருபாட்சிபுரம், பாகாயம்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த சூறைக்காற்றும், இடியுடனும் கூடிய கன மழை சுமார் 1 மணி நேரம் பெய்தது.

இந்த கனமழையின் காரணமாக ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலக பூங்காவில் சூறை காற்றின் காரணமாக மரங்கள் முறிந்து விழுந்தது. ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களின் மீது மரங்கள் முறிந்து விழுந்தன.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மரங்கள் முறிந்து விழும் காட்சி

சூறைக் காற்றின் காரணமாக கொணவட்டம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் உடைந்ததால்  மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சூறைக்காற்றுடன் கூடிய மழையின் காரணமாக மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் பாதுகாப்பான இடத்தில் இருக்கும்படியும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

காலை முதல் சுமார் 105 டிகிரியை கடந்து வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்போது இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com