2 கோடி மதிப்புள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் அழிப்பு

பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 கோடி மதிப்பிலான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் எரியூட்டு நிலையத்தில் அழிக்கப்பட்டது.
2 கோடி மதிப்புள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் அழிப்பு

பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 கோடி மதிப்பிலான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் எரியூட்டு நிலையத்தில் அழிக்கப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், 4.5 கோடி மதிப்பிலான  3135 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவில் அடுத்த தென்மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள இரசாயனம் மற்றும் மருத்துவ கழிவுகள் எரியூட்டு நிலையம் உள்ளது. இதில், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் 125 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 கோடி மதிப்பிலான 1215 கிலோ கஞ்சா, ஹெராயின், கொக்கையின், மெத்தம்பெட்டமைன்,  உள்ளிட்ட போதை பொருள்கள் நீதிமன்ற ஆணையின்படி இன்று அழிக்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் அவர்களின் தலைமையில், மத்திய குற்றப் புலனாய்வு பிரிவு  இணை ஆணையர் ரம்யா பாரதி மற்றும்  துணை ஆணையர் நாகஜோதி ஆகியோர் முன்னிலையில் போதைப் பொருள்கள் எரிக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், "கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இன்று 2 கோடி ரூபாய் மதிப்பிலான 1215 கிலோ  கஞ்சா, 1.25 கிலோ கிராம் ஹெராயின், 40 கிராம் மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருள்கள்  தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளது. கடத்த  இரண்டாண்டுகளில் 4.5 கோடி மதிப்பிலான  3135 கிலோ எடையுள்ள போதைப்பொருட்கள் நீதிமன்ற உத்தரவின் படி அழிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

மேலும் போதைப் பொருள்களுக்கு எதிராக காவல்துறை சார்பில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் கடந்த காலங்களை காட்டிலும் தற்போது போதைப் பொருள்களின் விலை மூன்று மடங்கு அதிகரித்து உள்ளதாக தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com