முதல்வர் மு.க.ஸ்டாலினை புகைப்படம் எடுத்த பரூக் அப்துல்லா 

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா அவரை புகைப்படம் எடுத்ததை திமுக தொண்டர்கள் ஆரவாரித்து வரவேற்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலினை புகைப்படம் எடுத்த பரூக் அப்துல்லா 

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா அவரை புகைப்படம் எடுத்ததை திமுக தொண்டர்கள் ஆரவாரித்து வரவேற்றனர்.

தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு பிறந்தநாளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

சென்னையில் நடைபெறும் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு மாநிலங்களின் அரசியல் கட்சித் தலைவர்கள் சென்னைக்கு வருகை தந்துள்ளனர். 

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா,உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் சென்னையில் நடைபெறும் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி அமர்ந்த ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா அவரை புகைப்படம் எடுத்தார். 

மேடையில் அமர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை புகைப்படம் எடுத்ததைக் கண்ட திமுக தொண்டர் ஆரவாரித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com