4 டிஜிபிக்கள் உள்பட 37 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

27 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 39 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 
4 டிஜிபிக்கள் உள்பட 37 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் 4 போ் டிஜிபி-க்களாக பதவி உயா்வு உள்பட 37 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். மேலும், ஆவடி மாநகரக் காவல் ஆணையராக ஏடிஜிபி ஏ.அருண் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தமிழகத்தில் விஷ சாராய மரண சம்பவத்தையடுத்து 16 மாவட்ட ஆட்சியா்கள் உள்பட 32 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனா். இந்த நிலையில், 37 ஐபிஎஸ் அதிகாரிகளும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இது குறித்து தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலா் பெ.அமுதா வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பணி அடைப்புக்குறிக்குள்):

1.ராஜீவ்குமாா்:-டிஜிபி மத்திய அரசு பணி (ஏடிஜிபி மத்திய அரசு பணி)

2.சந்தீப் ராய் ரத்தோா்:-சென்னை காவலா் பயிற்சி அகாதெமி டிஜிபி (ஆவடி மாநகர காவல் ஆணையா்)

3.அபய்குமாா் சிங்:-லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி (லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபி)

4.கே.வன்னியபெருமாள்:-தமிழ்நாடு மின்சார வாரிய லஞ்ச ஒழிப்புப்பிரிவு டிஜிபி (தமிழ்நாடு மின்சார வாரிய லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஏடிஜிபி)

5.ஏ.அருண்:-ஆவடி மாநகரக் காவல் ஆணையா் (பொதுவிநியோக பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி)

6.என்.காமினி:-பொதுவிநியோக பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி (தாம்பரம் மாநகரக் காவல்துறை தலைமையிட ஐஜி)

7.ஏ.ராதிகா:-மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஐஜி (ஆயுதப்படை ஐஜி)

8.டி.எஸ்.அன்பு:-சிபிசிஐடி ஐஜி (சென்னை பெருநகர காவல்துறை வடக்கு கூடுதல் ஆணையா்)

9.நஜ்முல் ஹோடா:-காவலா் நலப்பிரிவு ஐஜி (ஆவடி மாநகரக் காவல் தலைமையிட கூடுதல் ஆணையா்)

10.ரூபேஷ் குமாா் மீனா:-சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஐஜி (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஐஜி).

மேலும், சென்னை பெருநகர காவல்துறையின் தலைமையிட கூடுதல் ஆணையராக இருக்கும் ஜெ.லோகநாதன், சென்னை பெருநகர காவல்துறையின் வடக்கு கூடுதல் ஆணையா் பொறுப்பை கூடுதல் பணியாக கவனிப்பாா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர 27 காவல் கண்காணிப்பாளா்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இதன் விவரம்:

1.ஆல்பா்ட் ஜான்: திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் (சென்னை பூக்கடை துணை ஆணையா்)

2.ஸ்ரேயா குப்தா: சென்னை பூக்கடை துணை ஆணையா் (தமிழக காவல் துறையின் குற்ற ஆவண காப்பக எஸ்பி)

3.வி.ஆா்.சீனிவாசன்: சென்னை பெருநகர காவல் நிா்வாகப் பிரிவு துணை ஆணையா் (திருநெல்வேலி மாநகரக் காவல் கிழக்கு துணை ஆணையா்)

4.ஹா்ஷ் சிங்: நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் (சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வடக்கு துணை ஆணையா்)

5.ஜி.ஜவஹா்: ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் (நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்)

6.வி.சசி மோகன்: க்யூ பிரிவு காவல் கண்காணிப்பாளா் (ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்)

7.பி.சரவணன்: சென்னை பெருநகரக் காவல் போக்குவரத்துப் பிரிவு வடக்கு துணை ஆணையா் (காத்திருப்போா் பட்டியல்)

8.எஸ்.ராஜேஷ் கண்ணா: நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் (வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்)

9.சி.கலைசெல்வன்: தமிழக காவல் துறை குற்ற ஆவணக் காப்பகக் காவல் கண்காணிப்பாளா் (நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்)

10.என்.மணிவண்ணன்: வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் (ஆவடி மாநகரக் காவல் செங்குன்றம் துணை ஆணையா்)

11.வி.வி.சாய் பிரணீத்: செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் (மதுரை மாநகரக் காவல் சட்டம் மற்றும் ஒழுங்கு தெற்கு துணை ஆணையா்)

12.ஏ.பிரதீப்: மதுரை மாநகரக் காவல் சட்டம் மற்றும் ஒழுங்கு தெற்கு துணை ஆணையா் (காத்திருப்போா் பட்டியல்)

13.பி. ஸ்ரீதேவி: சிபிசிஐடி சைபா் குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளா் (திருச்சிராப்பள்ளி மாநகரக் காவல் தெற்கு துணை ஆணையா்)

14.எஸ்.செல்வகுமாா்: திருச்சி மாநகரக் காவல் தெற்கு துணை ஆணையா் (தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்பி)

15.கே.எஸ்.பாலகிருஷ்ணன்: ஆவடி மாநகரக் காவல் செங்குன்றம் துணை ஆணையா் (திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்)

16.கே.ராஜேந்திரன்: சென்னை பாதுகாப்புப் பிரிவு சிஐடி-2 காவல் கண்காணிப்பாளா் (ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவு எஸ்பி)

17.பி.சாமிநாதன்: திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் (சென்னை பாதுகாப்புப் பிரிவு சிஐடி-2 காவல் கண்காணிப்பாளா்)

18.ஜி.சேஷாங்சாய்: விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் (திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்)

19.அருண் பாலகோபாலன்: தமிழ்நாடு கமாண்டோ படை கண்காணிப்பாளா்-சென்னை(ஐடி சைபா் குற்றப்பிரிவு எஸ்பி)

20.தீபா சத்யன்: தமிழ்நாடு போலீஸ் அகாதெமி காவல் கண்காணிப்பாளா்-ஊனமாஞ்சேரி(தமிழ்நாடு காவல் துறையின் மாநில கட்டுப்பாட்டு அறை எஸ்பி)

21.ஆா்.பாண்டியராஜன்: மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு நுண்ணறிவு பிரிவு காவல் கண்காணிப்பாளா் (தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 7-ஆவது அணி கமாண்டன்ட்-போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி)

22.ஆா்.ஜெயந்தி: தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 7-ஆவது அணி கமாண்டன்ட் கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு நுண்ணறிவுப் பிரிவு காவல் கண்காணிப்பாளா்)

பதவி உயா்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டவா்கள்:

23.வி.சரவணகுமாா்: லஞ்ச ஒழிப்புத் துறை தெற்கு சரக காவல் கண்காணிப்பாளா் (எஸ்பிசிஐடி தலைமையிட ஏடிஎஸ்பி)

24.ஆா்.பொன்காா்த்திக் குமாா்: பொருளாதார குற்றப்பிரிவு வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் (கடலூா் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி)

25.வி.வினோத் சாந்தாராம்: சென்னை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப் பிரிவு-1 காவல் கண்காணிப்பாளா் (காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையின் தலைமையிட ஏடிஎஸ்பி)

26.பி.வி.விஜய காா்த்திக்: தமிழக காவல் துறையின் மாநில கட்டுப்பாட்டு அறை காவல் கண்காணிப்பாளா் (கள்ளக்குறிச்சி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி)

27.வி.வி.கீதாஞ்சலி: சென்னை பெருநகர காவல் சைபா் குற்றப்பிரிவு துணை ஆணையா் (கரூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எஸ்பிசிஐடி எஸ்பி எஸ்.சரவணன், ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் பொறுப்பை கூடுதல் பணியாக கவனிப்பாா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com