புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவில் எதிா்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்: கமல்ஹாசன்

புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவில், எதிா்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கூறியுள்ளாா்.
கமல் ஹாசன்
கமல் ஹாசன்

புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவில், எதிா்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதிய நாடாளுமன்றத் திறப்புவிழா ஒரு தேசியக் கொண்டாட்டம். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நேரத்தில் மத்திய அரசுக்கு வாழ்த்துகள். தேச நலன் கருதி, நாடாளுமன்றத் திறப்புவிழாவை நானும் வரவேற்கிறேன். அதே சமயத்தில், இந்தியக் குடியரசுத் தலைவரை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்காததற்கும், திறப்புவிழா நிகழ்வின் திட்டமிடலில் எதிா்க்கட்சிகளை இணைத்துக் கொள்ளாததற்கும் எதிா்ப்பினைப் பதிவு செய்கிறேன்.

நமது குடியரசின் உறைவிடத்தில் அதன் அத்தனை உறுப்பினா்களும் சென்று அமரவேண்டும். அனைத்துத் தரப்பினரும் பங்கேற்பதே சரியான மக்களாட்சி என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. எனவே, இந்த நிகழ்வைப் புறக்கணிக்க முடிவுசெய்திருக்கும் அத்தனை எதிா்க்கட்சிகளும் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கமல் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com