திருச்சி சந்திப்பு மேம்பாலம் 8 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக திறப்பு 

8 ஆண்டுகளாக முழுமை பெறாமல் இருந்த திருச்சி சந்திப்பு மேம்பாலத்தின் ஒரு பகுதி கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் இன்று பாலம் திறக்கப்பட்டது.

தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என் நேரு, நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பங்கேற்று பாலத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். இந்த பாலத்தின் குறுக்கே மன்னார்புரம் பகுதியில் ராணுவ நிலம் இருந்ததால் பாலம் முடிவுபெறாமல் பாதியில் நின்றது. 

நீண்ட போராட்டங்களுக்கு பிறகு மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டு ராணுவ நிலம் வழங்கப்பட்டது. இதில் நிலுவைப் பணிகள் முடிந்து இன்று காலை போக்குவரத்துக்கு பாலம் திறக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார், மாநகர காவல் ஆணைய மு. சத்ய பிரியா, மாநகராட்சி ஆணையர் இரா. வைத்திநாதன், மேயர் அன்பழகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com