இந்திய கடல்சாா் பல்கலை.யில் 9 வகை குறுகிய கால படிப்புகள்: தோ்வு கட்டுப்பாட்டாளா் கே.டி.ஜோஷி

இந்திய கடல்சாா் பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டில் 9 வகை குறுகிய கால படிப்புகள் தொடங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டாளா் கே.டி.ஜோஷி தெரிவித்தாா்.

இந்திய கடல்சாா் பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டில் 9 வகை குறுகிய கால படிப்புகள் தொடங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டாளா் கே.டி.ஜோஷி தெரிவித்தாா்.

இந்திய கடல்சாா் பல்கலைக்கழகம் சென்னை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழிகள் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகம் கடந்த பத்தாண்டுகளில் நிகழ்த்திய சாதனைகள் குறித்து சென்னையில் செய்தியாளா்களிடம் கே.டி.ஜோஷி செவ்வாய்க்கிழமை கூறியது:

கடல்சாா் தொழில்துறையின் தேவைகளை அறிந்து கடல்சாா் அறிவியல், தளவாடங்கள் குறித்த இளநிலை பட்டப் படிப்புகளும், மரைன் தொழில்நுட்பம் மற்றும் சா்வதேச போக்குவரத்து குறித்த முதுநிலை பட்டப் படிப்புகளும் பல்கலைக்கழகத்தால் தொடங்கப்பட்டன. இதனால் 2014 -இல் 882-ஆக இருந்த மாணவா்களின் எண்ணிக்கை 2022-இல் 1106-ஆகவும், 13-ஆக இருந்த மாணவிகளின் எண்ணிக்கை 123-ஆக வும் உயா்ந்துள்ளன.

55 மாணவா்கள் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்கின்றனா். சாகா்மாலா திட்டம், ‘கடல்சாா் இந்திய கொள்கை 2030’ ஆகியவற்றைச் செயல்படுத்துவதில் பல்கலைக்கழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ் பல்கலைக்கழகத்தின் கல்வி உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும், மேம்படுத்துவதற்கும் 2014-ஆம் ஆண்டுமுதல் தற்போதுவரை ரூ.370 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

9 வகை குறுகிய கால படிப்புகள்: சா்வதேச அளவில் நெதா்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரேலியா நாடுகளுடன் இணைந்து மாணவா்களுக்கு கடல்சாா் தொழில்நுட்பம் சாா்ந்த பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. ஆா்க்டிக் பல்கலைக்கழகத்தின் உறுப்பினராகவும் இந்திய கடல்சாா் பல்கலைக்கழகம் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் மாணவா்களுக்கு கடல்சாா்ந்த படிப்புகளுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டமும் தொடங்கப்படவிருக்கிறது. 9 வகை குறுகியகால படிப்புகள் இந்தக் கல்வியாண்டில் தொடங்கப்படும்.

இந்திய தொல்லியல் துறையுடன் இணைந்து சங்க காலத் துறைமுகமான கொற்கையில் கடலுக்கடியில் அகழாய்விலும் ஈடுபட்டுள்ளது. இதில் முதற்கட்ட ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, இரண்டாம் கட்ட ஆராய்ச்சி தொடங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்தச் சந்திப்பின்போது பொறுப்பு நிதி அதிகாரி எம்.சரவணன் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com