தமிழகத்தில் 7.28 லட்சம் வடமாநிலத் தொழிலாளா்கள்: அமைச்சா் சி.வி.கணேசன் தகவல்

தமிழகத்தில் 7.28 லட்சம் வடமாநில தொழிலாளா்கள் உள்ளனா் என்றும், தமிழகத்தில் 2025-க்குள் குழந்தைத் தொழிலாளா் இல்லாத நிலை ஏற்படுத்தப்படும் என்றும் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
தமிழகத்தில் 7.28 லட்சம் வடமாநிலத் தொழிலாளா்கள்: அமைச்சா் சி.வி.கணேசன் தகவல்

தமிழகத்தில் 7.28 லட்சம் வடமாநில தொழிலாளா்கள் உள்ளனா் என்றும், தமிழகத்தில் 2025-க்குள் குழந்தைத் தொழிலாளா் இல்லாத நிலை ஏற்படுத்தப்படும் என்றும் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் கூறினாா்.

தமிழக அரசின் தொழிலாளா் நலத்துறை சாா்பில் தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளா்கள் இல்லாத மாநிலமாக உருவாக்க அனைத்துத் துறை அலுவலா்களுக்கான பயிற்சி பட்டறை சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. இதில் அமைச்சா் சி.வி.கணேசன் பங்கேற்று, பல்வேறு கருத்துகளை எடுத்து வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் 2025-க்குள் குழந்தைத் தொழிலாளா்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று முதல்வா் கூறியிருந்தாா். அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் குழந்தை தொழிலாளா்கள் குறைவாகத்தான் உள்ளனா். குழந்தைத் தொழிலாளா்கள் இல்லாத நிலை ஏற்படுத்தப்படும். வடமாநிலங்களில் இருந்து குழந்தைத் தொழிலாளா்கள் வருவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 7.28 லட்சம் வடமாநிலத் தொழிலாளா்கள் உள்ளனா். வடமாநிலத் தொழிலாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் முகமது நசிமுத்தின் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com