கயிலைப் பேரணி: 1000 பேர் பங்கேற்பு

திருநெல்வேலியில் நடைபெற்ற கயிலைப் பேரணியில் 1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கயிலைப் பேரணி: 1000 பேர் பங்கேற்பு

திருநெல்வேலி: திருநெல்வேலியில் நடைபெற்ற கயிலைப் பேரணியில் 1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

திருவாவடுதுறை ஆதீனத்தின் சைவத்திமுறை நேர்முகப் பயிற்சி மையத்தின் சார்பில் 7 ஆம் தொகுப்பு பயிற்சி நடைபெற்றது. இதன் நிறைவு விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை  திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் கிழக்கு சந்நிதி முன்பிருந்து கயிலைப் பேரணி நடை பெற்றது.

திருவாவடுதுறை ஆதீனத்தின் 24 ஆவது குருமகா சந் நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் தலைமை வகித்தார். திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் தொடங்கி வைத்தார்.

இந்தப் பேரணியில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மாவட்டங்களைச் சேர்ந்த சிவ பக்தர்கள், சைவத் திருமுறை பயிற்சியாளர்கள் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பேரணியைத் தொடர்ந்து பேட்டையில் உள்ள மதிதா இந்துக் கல்லூரி வளாகத்தில் நிறைவு விழா நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com