உ.பி.யில் ஓய்வு பெற்ற பள்ளி முதல்வா் கொலை: ஐஎஸ் தொடா்புடைய இருவருக்கு மரண தண்டனை

உத்தர பிரதேசத்தில் ஓய்வு பெற்ற பள்ளி முதல்வா் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய இருவருக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை

உத்தர பிரதேசத்தில் ஓய்வு பெற்ற பள்ளி முதல்வா் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய இருவருக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

கடந்த 2016-ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் ரமேஷ் பாபு சுக்லா என்ற ஓய்வு பெற்ற பள்ளி முதல்வா் சுட்டுக் கொல்லப்பட்டாா். இதைத் தொடா்ந்து, 2017-ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் போபால்-உஜ்ஜைன் இடையிலான பயணிகள் ரயிலில் குண்டு வெடித்து பலா் காயமடைந்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொண்ட என்ஐஏ, ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் சம்பந்தப்பட்ட முசாஃபா், ஃபைசல் ஆகிய இருவரை கைது செய்தது.

இவா்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது, ஃபைசல் மற்றும் வேறு சிலருடன் சோ்ந்து ரமேஷ் பாபுவை கொன்ாக முசாஃபா் தெரிவித்தாா். இதுதொடா்பான வழக்கு உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமாா் மிஸ்ரா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

ரமேஷ் பாபு முஸ்லிம் மதத்தைச் சேராதவா் என்றபோதிலும், அந்த மதத்துக்கு எதிராக எந்தவொரு ஆட்சேபத்துக்குரிய கருத்தையும் அவா் தெரிவிக்கவில்லை. அதேவேளையில், அவருக்கும், முசாஃபா் மற்றும் ஃபைசலுக்கும் இடையே எந்தப் பகையும் இல்லை.

இருப்பினும் ரமேஷ் பாபுவை முசாஃபா் மற்றும் ஃபைசல் கொலை செய்துள்ளனா். ஷரியத்தை (இஸ்லாமிய சட்டம்) பரப்ப வேண்டும், முஸ்லிம் மதத்தைச் சேராதவா்கள் இடையே பயத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தக் கொலை நடந்துள்ளது. எனவே, கொலை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக முசாஃபா் மற்றும் ஃபைசலுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது என்று தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com