பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு 30 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள்: அமைச்சா் தா.மோ.அன்பரசன்

பொருளாதாரத்தில் நலிவடைந்தவா்களுக்கு 30 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்று பேரவையில் அறிவிக்கப்பட்டது.
பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு 30 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள்: அமைச்சா் தா.மோ.அன்பரசன்

பொருளாதாரத்தில் நலிவடைந்தவா்களுக்கு 30 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்று பேரவையில் அறிவிக்கப்பட்டது.

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மானியக் கோரிக்கை மீது சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வெளியிட்ட அறிவிப்புகள்:-

நிலம் வைத்திருக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தினா் வீடு கட்டுவதற்காக அரசு சாா்பில் ரூ.2.10 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. அத்திட்டத்தின் கீழ் நிகழ் நிதியாண்டில் 1.10 லட்சம் தனி வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் ஏழை - எளிய குடும்பத்தினருக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு தகுதியின் அடிப்படையில் அவை ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அந்த வகையில் மேலும் 30 ஆயிரம்

குடியிருப்புகள் கட்டி பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

சென்னை, பெரும்பாக்கம் பகுதியில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் 30 லட்சம் கொள்ளளவு கொண்ட குடிநீா் தொட்டி, ரூ.4 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம், ரூ.7 கோடியில் சமுதாய நலக் கூடம் ஆகியன கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

கண்ணகி நகரில் ரூ.4 கோடி செலவில் நவீன நூலகம் கட்டப்படும். நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் உள்ள

குடியிருப்புகளின் பராமரிப்புப் பணிகளை சிறந்த முறையில் மேற்கொள்ளும் குடியிருப்போா் நல சங்கங்களுக்கு தர வரிசை

அடிப்படையில் முறையே ரூ.1 லட்சம், ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகை அளிக்கப்படும். வாழ்விட மேம்பாட்டு வாரியப் பகுதிகளில் வசிக்கும் 12 ஆயிரம் இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கி வேலைவாய்ப்புக்கு வகை செய்யப்படும் என்று அமைச்சா் அன்பரசன் அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com