கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு: எழும்பூர் அரசு மருத்துவமனை விளக்கம்

கையை இழந்த குழந்தை உயிரிழந்தது தொடர்பாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை விளக்கமளித்துள்ளது. 
கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு: எழும்பூர் அரசு மருத்துவமனை விளக்கம்

கையை இழந்த குழந்தை உயிரிழந்தது தொடர்பாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை விளக்கமளித்துள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டத்தை சோ்ந்தவா் தஸ்தகீா் - அஜிஸா தம்பதியரின் ஒன்றரை வயது மகன் முகமது மகிா். தலையில் நீா் கோா்த்தல் பிரச்னை இருந்ததால் குழந்தை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு, குழந்தையின் வலது கையில் ‘ட்ரிப்ஸ்’ செலுத்தப்பட்டுள்ளது. ட்ரிப்ஸ் செலுத்தப்பட்ட வலது கை கருப்பாக மாறி, செயலிழந்து, அழுகியது. பரிசோதனை செய்த மருத்துவா்கள் வலது கையை அகற்ற வேண்டுமென கூறி, எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்பி வைத்தனா். கடந்த மாதம் குழந்தையின் வலது கை மூட்டு பகுதிக்கு மேல் வரை அகற்றப்பட்டது. 

இதற்கிடையில், குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவா், செவிலியா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் அந்தக் குழந்தையின் பெற்றோா் புகாா் அளித்தனா். இந்த நிலையில் கை அகற்றப்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த குழந்தை இன்று காலை உயிரிழந்தது. குழந்தையின் தாய் அஜிஷா  செய்தியாளர்களை சந்திப்பில் பேசியதாவது,  என் குழந்தையின் கை அகற்றபட்டதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என காவல்துறையில் புகார் அளித்திருந்தேன் ஆனால் இதுவரை அதற்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. 

தவறு செய்தது மருத்துவர்கள் தான் என அவர்கள் ஒத்து கொள்வதாகவும் குழந்தையின் உடல்நிலை குறித்து தான் கேட்கும் கேள்விக்கு எந்த வித பதிலையும் மருத்துவர்கள் சொல்லவில்லை எனவும் குற்றம் சாட்டினார். சம்மந்தப்பட்ட உறுப்பாகிய கை அகற்றப்பட்டுவிட்ட நிலையில் எதற்காக இப்போது உடற்கூறு செய்ய வேண்டும்? உடற்கூறாய்வு செய்து எதை கண்டறியப் போகிறார்கள்?  எனவே உடற்கூராய்வு செய்ய வேண்டாம் என அவர் கூறினார். இந்த நிலையில் கையை இழந்த குழந்தை உயிரிழந்தது தொடர்பாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை விளக்கமளித்துள்ளது. 

அதில், குழந்தைக்கான சில மருத்துவ சிகிச்சைகளுக்கு பெற்றோர் ஒப்புதல் அளிக்கவில்லை. பாக்டீரியா தொற்றினால் ரத்தத்தில் நச்சுகள் கலந்து குழந்தைக்கு பல்வேறு பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தது. உயர்தர சிகிச்சைகள் அளித்தும் குழந்தையை காப்பாற்ற இயலவில்லை. இவ்வாறு மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com