
கோப்புப்படம்
கொல்லம் - திருப்பதி, எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே புதிய ரயில்கள் இயக்குவதற்கு இந்திய ரயில்வே ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன்படி, திருப்பதி - கொல்லம் ரயில் வாரத்திற்கு இருமுறை இயக்கப்படுகிறது. சித்தூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம் வழியாக கொல்லம் சென்றடையும்.
இதையும் படிக்க | நீங்கள் ஹோட்டலில் அதிகம் சாப்பிடுபவரா? டிபிஎம் பற்றி தெரியுமா? - எச்சரிக்கும் நிபுணர்கள்!
அதுபோல எர்ணாகுளம்- வேளாங்கண்ணி இடையே வாரம் இருமுறை இயக்கப்பட உள்ள ரயில் கோட்டயம், கொல்லம், புனலூர், செங்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணி சென்றடையும்.
மேலும், பாலக்காடு - திருநெல்வேலி இடையே இயக்கப்பட்டு வரும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கவும் ரயில்வே ஒப்புதல் வழங்கியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...