தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்கிறது.
நாடு முழுவதும் சுங்கக் கட்டண உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு மற்றும் எரிவாயு விலை உயர்வு காரணமாக உணவுப் பொருள்கள் உள்பட அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, நேற்றுமுதல் வீட்டு உபயோக சமையல் எரிவாயுவின் விலை ரூ. 200 குறைக்கப்பட்டதால் மக்கள் சிறிது மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி, ஓமலூர், தருமபுரி உள்பட 28 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு 12 மணிமுதல் சுங்கக் கட்டணம் உயரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து சுங்கச்சாவடிகளிலும் குறைந்தது ரூ.5 முதல் ரூ.240 வரை கட்டணம் அதிகரிக்கிறது. இதனால், உணவுப் பொருள்களின் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.