மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், தினம் ஊதியம் பெறுவோர் மற்றும் நடுத்தர மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வருமானத்தை இழந்த நிலையில், அவர்கள் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால் அவர்களின் உடமைகள் என அனைத்தும் இழந்தனர். எனவே, வெள்ளம் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ரூ.6,000 உதவித் தொகையை ரூ.12,000 ஆக உயர்த்த வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் எந்தவித நிபந்தனையும் இன்றி நிவாரண உதவி வழங்க வேண்டும். காவிரி டெல்டா பகுதியிலும், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.17,000 முதல் ரூ.25,000 வரை பயிர் இழப்பு இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.