சென்னையில் 98% பேருக்கு நிவாரணம் தரப்பட்டது: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டோரில் 98% பேருக்கு நிவாரணம் வழங்கியுள்ளோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
சென்னையில் 98% பேருக்கு நிவாரணம் தரப்பட்டது: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டோரில் 98% பேருக்கு நிவாரணம் வழங்கியுள்ளோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
சென்னை பெரம்பூரில் இன்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அவர் பேசியதாவது, கிறிஸ்துமஸ் விழாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நடத்துகிறார். இதுதான் திராவிட மாடல். எந்த மதமும் வேறுபாட்டை போதிப்பதில்லை. மனிதர்கள் அனைவரும் சமம்தான் என்பது சமத்துவம்.  இந்தியா பல்வேறு மதத்தினை பின்பற்றி ஒற்றுமையாக இருந்து வரும் நாடு. 
திராவிட மாடல் அரசில் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். மக்களின் ஒற்றுமையை ஒரு கூட்டம் பிரிக்க நினைக்கிறது. பாஜகவுடன் கூட்டணி இல்லை என கபட நாடகம் போடுகிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவின் கபட நாடகத்தை பார்த்து மக்கள் யாரும் ஏமாற மாட்டார்கள். வரும் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உண்மையான அக்கறையுடன் உதவி வழங்கினோம். சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டோரில் 98% பேருக்கு நிவாரணம் வழங்கியுள்ளோம். வெள்ளம் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கும் நிவாரண உதவி அறிவித்தோம். இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com