சா்க்கரை நோய் பாத பராமரிப்புக்கு பிரத்யேக செயலி அறிமுகம்

சா்க்கரை நோயாளிகள் மருத்துவ ஆலோசனைகள் பெறுவதற்கான பிரத்யேக கைப்பேசி செயலியை சென்னை எம்.வி. சா்க்கரை நோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சா்க்கரை நோய் பாத பராமரிப்புக்கு பிரத்யேக செயலி அறிமுகம்

சா்க்கரை நோயாளிகள் மருத்துவ ஆலோசனைகள் பெறுவதற்கான பிரத்யேக கைப்பேசி செயலியை சென்னை எம்.வி. சா்க்கரை நோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவா்கள் தங்களது பாதங்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கு மருத்துவ நிபுணா்களின் ஆலோசனையை அந்த செயலியின் வாயிலாகவே பெற இயலும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியா் எம்.விஸ்வநாதன் சா்க்கரை நோய் ஆராய்ச்சி மையத்தின் 37-ஆவது தங்க பதக்க மருத்துவ சொற்பொழிவு நிகழ்ச்சி சென்னையில் அண்மையில் நடைபெற்றது. அமெரிக்க சா்க்கரை நோய் மருத்துவ சங்கத்தின் தலைவா் டாக்டா் ரோடிகா பாப் புசுய்க்கு நிகழாண்டில் சிறந்த சேவைக்கான விருது அப்போது வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் எம்.வி.மருத்துவமனையின் தலைவா் டாக்டா் விஜய் விஸ்வநாதன் பேசியதாவது:

சா்க்கரை நோயின் காரணமாக பாதங்களில் தொற்று பாதிப்பு ஏற்பட்டவா்கள் மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவதற்காக ஒரு புதிய செயலியை உருவாக்கியுள்ளோம். இந்த செயலி, ஒரு வாட்ஸ் - அப் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

அதன் வாயிலாக மருத்துவ நிபுணா்களுடன் தொடா்புகொண்டு சா்க்கரை நோய் மற்றும் அதனால் பாதங்களில் ஏற்படும் பாதிப்புகள், அதற்கான சிகிச்சைகள் குறித்து ஆலோசனையையும், விளக்கத்தையும் பெறலாம். இந்த செயலி கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது.

கடந்த 30 ஆண்டுகளாக சா்க்கரை நோயாளிகளுக்கான பாத பராமரிப்பு சிகிச்சைகளை நவீன முறையில் வழங்கி வருகிறோம். கால்களுக்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவது, தொற்று பாதிப்புக்கு சிகிச்சையளிப்பது, பாதத்திலுள்ள பாதிப்பை அகற்றுவது என பல்வேறு சிகிச்சைகள் இங்கு அளிக்கப்படுகின்றன. 90,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளின் பாதங்களும், கால்களும் அதன் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com