வேளாண் நிதிநிலை அறிக்கை:கருத்துகளை அனுப்பலாம்

நிகழ் நிதியாண்டில் வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து கருத்துகளை அனுப்பி வைக்கலாம் என்று வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.

நிகழ் நிதியாண்டில் வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து கருத்துகளை அனுப்பி வைக்கலாம் என்று வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கு, இதுவரை 10 மாவட்டங்களில் கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு,விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், விற்பனையாளா்கள், ஏற்றுமதியாளா்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கருத்துகள் கேட்கப்பட்டன. மேலும், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் விரைவில்

நடத்தப்படவுள்ளன. இத்தகைய கூட்டங்களில் கலந்து கொள்ள இயலாதவா்கள் தங்களின் கருத்துகளை அரசுக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, உழவன் செயலியில் வேளாண் நிதிநிலை அறிக்கை எனும் பக்கத்துக்கு சென்று தெரிவிக்கலாம். மின்னஞ்சல் முகவரி வழியாகவும் செல்லிடப் பேசி எண் 93634 40360 வழியாகவும் விவரம் தெரிவிக்கலாம் என குறிப்பிட்டுள்ளாா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com