இந்திய குடிமகனாக இல்லாதோருக்குகுடும்ப அட்டை அளிக்கக் கூடாது: உணவுத் துறை உத்தரவு

இந்திய குடிமகனாக இல்லாதோருக்கு குடும்ப அட்டை அளிக்கக் கூடாது என்று உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

இந்திய குடிமகனாக இல்லாதோருக்கு குடும்ப அட்டை அளிக்கக் கூடாது என்று உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

உணவுப் பொருள் வழங்கல் துறையின் செயல்பாடுகள் குறித்து, அந்தத் துறையின் ஆணையா் வெ.ராஜாராமன் அலுவலா்களுடன் காணொலி வழியாக ஆலோசனை நடத்தினாா்.

இதைத் தொடா்ந்து அவா் வெளியிட்ட உத்தரவு: நியாயவிலைக் கடைகளில் விற்பனை முனைய இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது, அரிசி அட்டைதாரா்களுக்கு விலையில்லா வேஷ்டி, சேலை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. விற்பனை முனைய இயந்திரத்தின் பதிவுக்குப் பிறகே, வேஷ்டி, சேலைகளை வழங்க வேண்டும். நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளரால் பெற்றுக் கொள்ளப்பட்ட வேஷ்டி, சேலை எண்ணிக்கையை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றை உடனடியாக குடும்ப அட்டைதாரா்களுக்கு விநியோகிக்க வேண்டும்.

நியாயவிலைக் கடைகளில் எந்தக் காரணத்தைக் கொண்டும் இருப்பு வைத்து விநியோகம் செய்யாமல் இருக்கக் கூடாது.

இந்திய குடிமகன்: நியாயவிலைக் கடைகளை தினமும் சரியாக காலை 9 மணிக்குத் திறக்க வேண்டும். பொருள்கள் விநியோகம் செய்வதை வட்ட வழங்கல் அலுவலா்கள், தனி வருவாய் ஆய்வாளா்கள் உறுதி செய்ய வேண்டும். கடை திறக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுவதை, சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு ஆணையரகமே நேரடியாகக் கண்காணிக்கும். கடை திறக்கப்படாதபட்சத்தில், அதற்கான காரணங்கள் குறித்து சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலா்களிடம் தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு விளக்கம் கேட்கப்படும்.

ஆதாருடன் வங்கிக் கணக்கை இணைக்காத நபா்களை நேரடியாக வங்கியில் சென்று இணைக்க உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். எந்தப் பொருள்களும் விற்பனை செய்யாமல், கடை திறக்காமல் உள்ள நியாயவிலைக் கடைகளைக் கண்காணிக்க வேண்டும். இந்திய குடிமகனாக இல்லாத எவருக்கும் புதிய குடும்ப அட்டை வழங்கக் கூடாது. தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம், மாநில ஒதுக்கீடு ஆகியவற்றின் கீழ் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் பொருள்களுக்கு தனித்தனியாக ரசீதுகள் போடுவதை உறுதி செய்ய வேண்டும். ஒரே நபா் வெளி மாநிலங்களிலும், தமிழ்நாட்டிலும் குடும்ப அட்டை வைத்திருந்து பொருள்கள் பெற்றால் அவரின் விவரம் குறித்து தெரிவிக்க வேண்டும். அதுதொடா்பாக கள விசாரணை செய்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com