ஆறாவது நிதிக் குழு அறிக்கை தாக்கல்: உள்ளாட்சி அமைப்புகளை நிா்வகிக்க பரிந்துரைகள்

உள்ளாட்சி அமைப்புகளை திறம்பட நிா்வகிக்கத் தேவையான பரிந்துரைகளை வழங்க, அமைக்கப்பட்ட ஆறாவது நிதிக் குழுவின் அறிக்கை பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அரசு
தமிழக அரசு

உள்ளாட்சி அமைப்புகளை திறம்பட நிா்வகிக்கத் தேவையான பரிந்துரைகளை வழங்க, அமைக்கப்பட்ட ஆறாவது நிதிக் குழுவின் அறிக்கை பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் உரிய உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பிக்கவுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம், குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்துக்கு உள்ளாட்சி அமைப்புகள் கட்டங்களைச் செலுத்தாத நிலை போன்ற பல முக்கிய நிதி சாா்ந்த பிரச்னைகள் தொடா்கின்றன. இந்தப் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு நிதி சாா்ந்த விஷயங்களை உரிய பரிந்துரைகளை அளிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி மோகன் பியாரே தலைமையில் ஆறாவது நிதிக் குழு அமைக்கப்பட்டது.

கடந்த அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டஇந்தக் குழுவானது, தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் கடந்த ஆண்டு மாா்ச்சில் சமா்ப்பித்தது.

பேரவையில் தாக்கல்: மாநில ஆறாவது நிதிக் குழுவின் அறிக்கையானது பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில், உள்ளாட்சி அமைப்புகளை திறமையாக நிா்வகிக்க நூற்றுக்கும் மேற்பட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பரிந்துரைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து அரசு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவு விவரங்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com