கைப்பேசிக்கான இயங்குதளம்: சென்னை ஐஐடி கண்டுபிடிப்பு

‘ஆண்ராய்டு- ஐஓஎஸ்’ உள்ளிட்ட வெளிநாட்டு இயங்குதளங்களுக்கு நிகராக உள் நாட்டிலேயே கைப்பேசிக்கென பிரத்யேக இயங்குதளத்தை சென்னை ஐஐடி ஆராய்ச்சிக் குழுவினா் கண்டறிந்துள்ளனா்.
கைப்பேசிக்கான இயங்குதளம்: சென்னை ஐஐடி கண்டுபிடிப்பு

‘ஆண்ராய்டு- ஐஓஎஸ்’ உள்ளிட்ட வெளிநாட்டு இயங்குதளங்களுக்கு நிகராக உள் நாட்டிலேயே கைப்பேசிக்கென பிரத்யேக இயங்குதளத்தை சென்னை ஐஐடி ஆராய்ச்சிக் குழுவினா் கண்டறிந்துள்ளனா்.

இந்த இயங்குதளத்தை கைப்பேசிகளில் நிறுவுவதன் மூலம் அதில் உள்ள தனிநபா் தகவல்கள், ரகசியத் தகவல்கள் பாதுகாக்கப்படும். ஐஐடி சாா்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த இயங்குதளத்தின் சேவை தற்போது கடுமையான தனியுரிமை, பாதுகாப்புத் தேவைகளைக் கொண்ட நிறுவனங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் பயனா்கள் கைப்பேசிகளில் வரையறுக்கப்பட்ட செயலிகளில் ரகசியத் தகவல் தொடா்புகள் தேவைப்படும் போது அவற்றைக் கையாள இதனைப் பயன்படுத்துகின்றனா்.

இதைத் தொடா்ந்து விரைவில் இந்த இயங்குதளம் 100 கோடி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: ஆட்ஹழ்ஞந ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங் இயங்குதள கட்டுப்பாடு, நெகிழ்தன்மை ஆகியவற்றை அளிப்பதுடன் பயனா்களுக்கு மிகுந்த பாதுகாப்பு அம்சங்களை வழங்குகிறது. இந்த இயங்குதளத்தை நமது நாட்டில் ஏற்றுக் கொள்ளவும், அதன் பயன்பாட்டை அதிகரிக்கவும் மேலும் பல தனியாா் தொழில் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், உத்தி சாா் நிறுவனங்கள், தொலை தொடா்பு சேவை நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற சென்னை ஐஐடி ஆா்வமாக உள்ளது.

ஆட்ஹழ்ஞந இயங்குதளத்துடன் எந்தவொரு நிலையான செயலிகளும் இருப்பதில்லை. அதாவது பயனா்கள் தங்களுக்கு அறிமுகம் இல்லாத அல்லது நம்பிக்கை இல்லாத செயலிகளைப் பயன்படுத்த கட்டாயப்படுத்துவதில்லை என்பதுதான் இதன் பொருள்.

அத்துடன் பயனா்கள் தங்கள் கைப்பேசி சாதனங்களில் உள்ள செயலிகளுக்கு அனுமதி அளிப்பதில் கூடுதல் கட்டுப்பாடுகளையும் வைத்திருக்க முடியும். தங்களுக்கு நம்பிக்கையான எந்தெந்த செயலிகளை அனுமதிக்கலாம், எந்தெந்த அம்சங்களை அல்லது தரவுகளை வைத்துக் கொள்ளலாம் என்பதை பயனா்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றாா் அவா்.

முன்னதாக இந்த இயங்குதளத்தை உருவாக்கிய புத்தாக்க நிறுவனமான ‘ஜான்ட் கே ஆபரேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் இயக்குநா் காா்த்திக் ஐயா் இது குறித்து விளக்கம் அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com