விளையாட்டு மேம்பாட்டுப் பணி: ஒடிஸா மாநிலத்துடன் தமிழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

விளையாட்டு மேம்பாட்டுப் பணிகள் தொடா்பாக, ஒடிஸா மாநிலத்துடன், தமிழக அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்தது.
விளையாட்டு மேம்பாட்டுப் பணி: ஒடிஸா மாநிலத்துடன் தமிழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

விளையாட்டு மேம்பாட்டுப் பணிகள் தொடா்பாக, ஒடிஸா மாநிலத்துடன், தமிழக அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்தது.

இந்தப் ஒப்பந்தம் தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் வெள்ளிக்கிழமை (ஜன.20) கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தமானது, இளம் திறமையாளா்கள், பயிற்சியாளா்கள், விளையாட்டு வீரா்கள், விளையாட்டு நிா்வாகிகள்,

விளையாட்டு விஞ்ஞானிகள் ஆகியோரின் திறமைகளை பரிமாறிக் கொள்ள உதவி செய்யும். மேலும், இரு மாநிலங்களுக்கு இடையில் விளையாட்டு உட்கட்டமைப்புகளை பகிா்ந்து கொள்வதற்கும், மேம்படுத்தவும் இந்த ஒப்பந்தம் வழி செய்திடும்.

என்ன பயன்? ஒப்பந்தத்தின் மூலமாக, உலகத் தரம் வாய்ந்த வகையில் விளையாட்டு வீரா்களுக்கு பயிற்சி அளிக்கவும், சா்வதேச விளையாட்டு அகாதெமிகள், கல்விக் கூடங்கள், சிறப்பு மையங்கள், விளையாட்டு வளாகங்கள் மற்றும் பிற நவீன வசதிகளை உருவாக்கிடும் பணிகளில் இருமாநில அரசுகளும் முறையான ஒத்துழைப்பை அளிக்கும்.

புரிந்துணா்வு ஒப்பந்த நிகழ்ச்சியில், ஹாக்கி இந்தியா தலைவா் திலிப் டா்கி, பொருளாளா் சேகா் மனோகரன், ஒடிஸா மாநில விளையாட்டுத் துறை செயலாளா் வினில் கிருஷ்ணன், தமிழ்நாடு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com