எதிரணியில் குழப்பம் உள்ளது என பேச இளங்கோவனுக்கு தகுதியில்லை: கே. அண்ணாமலை

எதிரணியில் குழப்பம் உள்ளது என பேச இளங்கோவனுக்கு தகுதியில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

எதிரணியில் குழப்பம் உள்ளது என பேச இளங்கோவனுக்கு தகுதியில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். இடைத்தேர்தல் வேட்பாளர் விவகாரத்தில் எடுத்தோம், கவிழ்த்தோம் என முடிவெடுக்க முடியாது. கூட்டணி தர்மம் மதிக்கப்பட வேண்டும்.

எதிரணியில் குழப்பம் உள்ளது என பேச இளங்கோவனுக்கு தகுதியில்லை. வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியில்தான் குழப்பம் உள்ளது. கூட்டணிக்கு மரபு, தர்மம் உள்ளது. இடைதேர்தல்கள் கட்சியின் பலத்தை தீர்மானிப்பதற்கானது அல்ல. தி.மு.க கூட்டணியை எதிர்த்து நிற்க கூடிய கட்சி பலம் வாய்ந்த கட்சியாக மக்கள் ஆதரவுள்ள கட்சியாக இருக்க வேண்டும். எங்கள் கூட்டணியில் பலம் வாய்ந்த கட்சி, பெரிய கட்சி அ.தி.மு.க தான்.

இடைத்தேர்தலில் பணம் அதிகம் செலவு செய்வார்கள். தி.மு.க தேர்தல் குழுவில் பல அமைச்சர்கள் இருக்கிறார்கள். அதிலேயே பணம் எந்தளவிற்கு செலவு செய்யப்படும் என்பது தெரிகிறது. எனவே இவைற்றையெல்லாம் எதிர்த்து களம் காண பலம் வாய்ந்தவர் வேட்பாளராக இருக்க வேண்டும்.  எந்தவித குழப்பமும் இல்லை.

எங்கள் கூட்டணியில் பெரிய கட்சி அ.தி.மு.க ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஏற்கனவே அமைச்சரான பலர் அந்த கட்சியில் இருக்கிறார்கள்.பண பலம், படை பலம், அதிகார பலத்தை எதிர்த்து நிற்கக் கூடிய வேட்பாளராக இருக்க வேண்டும்.  நிற்க கூடிய வேட்பாளருக்கு எல்லா விதமான ஒத்துழைப்பும் வழங்க வேண்டியது எங்கள் கடமை.

 ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பின்னால் அவர் கட்சியின் மாவட்ட தலைவரே நிற்பாரா என்பது சந்தேகம் தான். பொது வேட்பாளரை நிறுத்த வேண்டியதில்லை.  அ.தி.மு.க வில் பலம் வாய்ந்த தலைவர்கள் இருக்கிறார்கள். ஈரோட்டில் நின்று வெற்றி பெற்றவர்களும் இருக்கிறார்கள் என்றார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com