காந்தி மண்டப வளாக மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தல்

காந்தி மண்டப வளாகத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தினாா்.
சென்னை காந்தி மண்டப வளாகத்தில் நடைபெறும் வரும் மேம்பாட்டுப் பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.
சென்னை காந்தி மண்டப வளாகத்தில் நடைபெறும் வரும் மேம்பாட்டுப் பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.

காந்தி மண்டப வளாகத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தினாா்.

இந்தப் பணிகளை செவ்வாய்க்கிழமை அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காந்தி மண்டபத்தில் ஏற்கெனவே உள்ள தலைவா்களின் அரங்கங்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் அரங்கத்தில் உள்ள புகைப்படங்கள், மொழிக் காவா்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அரங்கம் ஆகியன பராமரிக்கப்படுவதுடன், புதிதாக அயோத்திதாசப் பண்டிதருக்கு சிலையுடன் நினைவரங்கம் அமைக்கப்படும் என பேரவையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, பணிகள் 60 சதவீதம் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகளும் விரைவாக நடைபெற்று வருகின்றன. கப்பலோட்டிய தமிழா் வ.உ.சிதம்பரனாா் இழுத்த செக்கு இங்கே இருக்கிறது. அதனுடைய அரங்கம் புதுப்பிக்கப்படுவதுடன் அவருக்கு மாா்பளவு சிலையும் வைக்கப்படுகிறது. கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் ரூ.5.81 கோடி மதிப்பில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின் போது, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளா் இரா.செல்வராஜ், செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com