பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

மாமன்னன் ஓடினா என்ன?, ஓடாட்டி என்ன?; இதுவா வயிற்று பசியை போக்க போகுது? - இபிஎஸ் தாக்கு

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில், மாமன்னன் படம் ஓடினால் என்ன? ஓடாட்டி என்ன?; இதுவா நாட்டு மக்களுக்கு தேவை; இதுவா மக்களின் வயிற்று பசியை போக்க போகுது?

News image

மதுரை மாநாட்டிற்கான இலச்சினையை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி

Updated On :5 ஜூலை 2023, 6:31 am

சென்னை: அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில், மாமன்னன் படம் ஓடினால் என்ன? ஓடாட்டி என்ன?; இதுவா நாட்டு மக்களுக்கு தேவை; இதுவா மக்களின் வயிற்று பசியை போக்க போகுது? என அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுகவின் பொன் விழா மாநாடு ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் நடைபெறுகிறது. 

இது குறித்து அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இதில், மதுரை பொன் விழா மாநாடு குறித்தும் எவ்வாறு நடத்துவது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. மேலும், எடப்பாடி பழனிசாமி மதுரை மாநாட்டிற்கான இலச்சினையை வெளியிட்டார்.

பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, "எம்ஜிஆர் தோற்றுவித்த அதிமுக ஆலமரம் போல் தழைத்து நிற்கிறது. அதிமுக வரலாற்றில் இன்றைய நாள் சரித்திரம் படைத்த நாளாக உள்ளது. 2018 ஆம் ஆண்டு உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டது.‌ மீண்டும் 3 மாதத்திற்கு முன் உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது. இன்று அதிமுகவில் 1.60 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இரண்டரை மாதத்தில் அதிக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்ட பெருமை அதிமுகவுக்கு உண்டு. 

எங்களை வீழ்த்துவதற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற ஆட்சியாளர்கள் எத்தனையோ வித்தைகள் நிகழ்த்தினார்கள். ஆனால் அவை எல்லாம் தகர்க்கப்பட்டன. ஆனால், இன்று தமிழகத்தில் அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சியாக அதிமுக உள்ளது. சிலர் திமுகவிற்கு பி-டீமாக செயல்பட்டு எங்களை உடைக்க நினைத்தார்கள். அவர்களுக்கு உறுப்பினர் சேர்க்கை மூலமாக பதில் சொல்லியுள்ளோம். அடுத்து வரும் தேர்தலுக்கு வீர வரலாற்று மாநாடு அடித்தளமாக அமையும்" என கூறினார்.

இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "காவிரி விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை கூறியுள்ளது. அதன் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. தற்போது கர்நாடக மாநிலங்களுக்கு இடையே உள்ள உறவை சீர்குலைக்கும் வகையில் அம்மாநில முதல்வர் பேசி வருகிறார். காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அதிமுக தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தினோம். இப்போது காங்கிரஸ் திமுக இணைந்து இருக்கின்றன. இந்தியா முழுவதையும் ஓருங்கிணைப்பேன் என்று கூறுகின்ற முதல்வர் ஏன் அவர்களிடம் பேசி ஜூன் மாதத்திற்கான தண்ணீரை பெறவில்லை.

இன்றைய முதல்வர் இதை கண்டு கொள்ளாமல் இருப்பது தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதி. அதிமுக ஆட்சியில் மருத்துவத் துறை சிறப்பாக இருந்தது. கரோனா தொற்று காலங்களில் சிறப்பாக செயல்பட்டு மக்களின் உயிரை காப்பாற்றியது அதிமுக அரசு. இன்றைய தினம் திமுக தங்களையே புகழ்ந்து கொள்கிறது. 

2 ஆண்டு காலத்தில் தமிழக மருத்துவத் துறை சீரழிந்து விட்டது. உரிய முறையில் நிர்வகித்தால் சிகிச்சை பெறுபவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்கும். திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு 3 மருத்துவக் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 500 மாணவர் மருத்துவப் படிப்பை இழந்துள்ளார்கள். 

அதிமுக ஆட்சியில் 11 அரசு மருத்துவமனைகள் கொண்டு வந்தோம்‌‌. திமுக ஆட்சியில் பல பிரச்னைகள் இருக்கின்றன. இனியாவது திமுக அரசு விழித்து கொள்ள வேண்டும். 

விலை வாசி குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால், மாமன்னன் குறித்து கேள்வி கேட்கிறார்கள். அத்தியாவசியப் பொருட்களின் விலை வாசி உயர்வுதான் முக்கியம் தவிர, மாமன்னன் படம் முக்கியமில்லை. அது ஓடினால் என்ன?, ஓடாட்டி என்ன?; இதுவா நாட்டு மக்களுக்கு தேவை; இதுவா மக்களின் வயிற்று பசியை போக்க போகுது? தற்போது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் குறித்து படம் எடுக்கிறார்கள்.

எங்கள் ஆட்சியில் சபாநாயகர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் சட்டப்பேரவையில் திமுக அவரது சட்டையை கிழித்தார்கள்.  அவரது இருக்கையில் திமுகவினர் அமர்ந்து இருக்கையின் புனிதத்தை கெடுத்தார்கள். இவர்களுக்கு தாழ்த்தப்பட்ட சமுதாயம் குறித்து பேச எந்த தகுதியும் இல்லை. 

பாஜக உடனான உறவு குறித்து நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தி இருக்கின்றோம். நாங்கள் கூட்டணி குறித்த குழப்பம் இல்லாமல் இருக்கிறோம். தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து சொல்வோம். நேரம் வரும்போது வெளிப்படையாக பேசுவோம்" என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.