உறங்கிக்கொண்டிருந்த பெண்ணை லத்தியால் சரமாரியாக அடிக்கும் பெண் காவலர்! விடியோ வைரல்!

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரை, பெண் காவலர் சரமாரியாக தாக்கும் விடியோ வைரலாக பரவி வருகிறது. 
உறங்கிக்கொண்டிருந்த பெண்ணை லத்தியால் சரமாரியாக அடிக்கும் பெண் காவலர்! விடியோ வைரல்!

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரை, பெண் காவலர் சரமாரியாக தாக்கும் விடியோ வைரலாக பரவி வருகிறது. 

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து கடலூர், விருத்தாசலம், அரியலூர், பெரம்பலூர், கரூர் மற்றும் புறநகர் பகுதிகளான சமயபுரம், குழுமணி, பெட்டவாய்த்தலை குளித்தலை, முசிறி, துறையூர் லால்குடி, துவாக்குடி, திருவெறும்பூர், பெல், நவல்பட்டு ஆகிய ஊர்களுக்கு உள்ளூர் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் நூற்றுக்கணக்கில் இயக்கப்பட்டு வருகின்றன. 

இதன் காரணமாக தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் ஆதரவற்றோர் மற்றும் பேருந்தை தவறவிடுபவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்து கிடைக்காதவர்கள் யாசகர்கள் இரவு நேர கடை நடத்தி வருபவர்கள் இரவு நேரங்களில் சத்திரம் பேருந்து நிலைய நடைமேடையில் படுத்து உறங்குவது வழக்கம்.

பின்பு பேருந்து வந்தவுடன் அவர்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்வார்கள். 

இதே போல் இன்று அடையாளம் தெரியாத பெண் ஒருவர் பேருந்து நிலைய நடைமேடையில் அங்கு படுத்து உறங்கி உள்ளார். பேருந்து நடை மேடையில் படுத்து உறங்கிய அந்த பெண்ணை இரவுநேர பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் லத்தியால் கடுமையாக தாக்குவது போல் விடியோ தற்பொழுது இணையதளங்களில் பரவி வருகின்றன.

 யார் அந்தப் பெண் எதற்காக அங்கு படுத்து உறங்கினார் என்ன காரணத்திற்காக அந்த பெண் காவலர் அந்தப் பெண்ணை தாக்கினார் என்பது குறித்து தகவல் தெரியவில்லை. உறங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை பெண் காவலர் சரமாரியாக தாக்கும் விடியோ தற்பொழுது வைரலாகி இணையதளங்களில் பரவி வருகிறது.

படுத்து உறங்கும் ஒரு பெண்ணை என்ன காரணம் என்று விசாரிக்காமல் சரமாரியாக தாக்கக்கூடாது என சக பயணிகள் வருத்தம் தெரிவித்து செல்லும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளது. படுத்து உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை காவலர் தாக்கியதை சத்திரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் விடியோ எடுத்து இணையதளங்களில் பரவச் செய்துள்ளனர். 

பெண்ணை தாக்கிய பெண் காவலர் மீது உயர் அதிகாரிகள் கடுமையாக நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com